பக்கம்:நிழல் முகங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 هي

அ! ந்த ரயில், கனக விசயன் தலையில் கல் ஏற்றியதாக கூறப்படும் சேரன் செங்குட்டுவன்போல், வடபுலத்தில் இருந்து தென்புலத்திற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

அந்த ரயிலின் எஸ்-11 பெட்டியில் ஆறு இருக்கைகள் அதாவது ஒரு நீளப் பெஞ்சும், அரைப் பெஞ்சும் ரயில்வே துப்புரவுத் தொழிலாளர் களுக்குச் சொந்தமானவை. பலராமன், ஜன்னலோரம் தபக்கென்று உட்கார்ந்தான். செம்மேனிக்காரன், லேசாய் நீண்ட பற்கள், எலும்பும் சதையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியப் போவதில்லை என்று சபதமேற்றது போன்ற கட்டுடம்புக் காரன். இவனுக்கு இடம் கொடுப்பதற்காக, வலது காலை நகர்த்திய படி, அங்குலம் அங்குலமாக நகர்ந்தான் ஒருத்தன். பலராமனுக்கு ஏதோ பெரிய மனது பண்ணி இடம் கொடுப்பவன் போல. பெயர் நாராயணனாம். ஆனால் அவனிடம்.சக்கிரதாயு தத்திற்குப் பதிலாக இரும்பு நட்டுக்களும் ஸ்பேனர்களும் இருந்தன. பதவிப் பெயர் உதவி மெக்கானிக்காம். இதுக்கு நாற்பது வயதுக்காரன் அறுபது வயது நரைமுடியோடு காட்சிக் காட்டினான். தல்ைமை மெக்கானிக்காம். எதிர்ப் பெஞ்சில், ஒரு சர்தார். அவரைப் பயத்தோடு பார்த்தபடியே. பல பயணிகள் பெட்டியைக் கடந்து கொண்டிருந்தார்கள். அவருக்கருகே ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண். "அன்னையா. அன்னையர்." என்று வெளியே வேர்க்கடலைக் கொறித்தவரைப் பார்த்து, அவள் கூப்பிட்டதில் இருந்து அநேகமாய் அவள் கன்னடக் கிழவியாக இருக்கலாம், அவளுக்கருகே ஒரு அரும்பு மீசை இளைஞன். -

ரயில் பயல், சாவகாசமாக வருபவன்போல் உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும், பலராமனும், நாராயணனும், தங்கள் இருக்கைகளுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தி, அவனை உட்காரச் சொல்வது போல் பார்த்தார்கள், பயல், பேசாமல் பெரிய மனிதத் தோரணையுடன், கைகளைக் கட்டியபடி நின்றபோது, நாராயணன் கிண்டலாய்க் கேட்டான்.

"துரை உட்கார மாட்டிங்களோ? அடச் சீ. உட்காருடா: இல்லாட்டால் வேற எவனாவது இடையில் வந்து குந்தப்போறான்." பயல் பேசாமல் இருந்தான். பலராமன், அவனை கேள்வியோடு பார்த்தபோது, அவன், இருக்கையைச் சுட்டிக் காட்டினான். பலராமன் சிரித்தபடியே, "நீயே ஒசி. அதுல வேற. ஜன்னல் சீட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/22&oldid=588188" இலிருந்து மீள்விக்கப்பட்டது