பக்கம்:நிழல் முகங்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 207

ஓசை போட்டபடியே ஒடத் துவங்கியது. ரயில் பயலுக்கு அப்போது தான் கீழே இறங்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. எழுந்திருக்கப் போனான். உடனே அந்தோணி "சரிதாண்டா டில்லி வரைக்கும் வாடா" என்றான். பயலும் பேசமால் இருந்து விட்டான். "அம்மை மறக்க அல்லது அந்த சோகப் பிரிவைத் தாங்கிக் கொள்ள இந்த "அப்"களின் தோள்கள் அவனுக்குத் தேவைதான்.

படபடத்தான், அந்தோணியிடம் கேட்டான்.

"யாரை விட்டுப் போனாலும், இந்தப் பயல் சுந்தரத்தை விட்டுப் போகவே மாட்டான். ஆமா. அந்தோணி சுந்தரத்துக்கு இப்போ எப்படி இருக்குது.? நான் ஆஸ்பத்திரியில் போய் பார்க்கணுமுன்னு நெனச்சேன். முடியல. பிழைச்சுக்குவாரா..?"

"இன்னும் ஆஸ்பத்திரியில் இன்டென்சிவ் வார்ட்ல தான் அவரை வச்சுருக்காங்க. அவர் இருக்கதும் இறக்கதும் பாதிப் பாதியாம். பாவம் மகளோட கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார். கல்யான அழைப்பிதழ்கள் வாங்குறதுக்காக சட்டையை போட்டுக்கினு புறப்பட்டிருக்கார். அப்படியே நெஞ்சை பிடிச்சுட்டு சுருண்டு விழுந்திட்டார்."

"இந்தக் காலத்துல யாருக்கு என்னது வருதுன்னே தெரியல. சாவு ரொம்ப மலிஞ்சுட்டு. ஒரு சின்ன கட்டி வருது என்னடான்னா கேன்ஸர் என்கிறான். வாயுக் கோளார்ல நெஞ்சு வலியோன்னு நெனைக்கோம். அட்டாக் என்கிறான். இதனாலதான் அந்தக் காலத்துலயே நம்ம பெரியவங்க யோகாசன முறையை சொல்லி வச்சுட்டு, போனாங்க."

"இந்த அவசர காலத்துல அதுவும் ஷிப்ட் டுட்டியில் இருக்கிற நம்மை மாதிரி ஆட்களுக்கு யோகாசனம் செய்ய நேரம் எங்கேடா இருக்குது..? போனவாரம் எனக்கு வேண்டியவரு யோகாசனம் செய்து உடம்பை ரப்பர் மாதிரி வச்சிருந்தார். பிளாட்பாரத்துல ஒழுங்காய் நடந்தவர். பல்லவ பஸ் அடிச்சு அங்கேயே கொன்னுட்டான். இதுக்கென்ன சொல்றே."

"என்ன இழவோ. சுந்தரம் ஸாருக்கு இப்படி வர வேண்டாம். இந்தப் பயலை உயிருக்கு உயிராய் கவனிச்சார். நாமக.ட நம்ம பசங்களை அப்படி கவனிக்க மாட்டோம்."

அப்போதுதான், அந்த மூவரும் அந்தச் சிறுவனை, அவன் இருந்த பக்கமாகத் திரும்பிப் பார்த்தார்கள். அவன் அங்கே இல்லை. அவர்கள் எதிரில், கீழே மண்டியிட்டு மேலே கண்களைத் துருத்தி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான அவனைப் பார்த்ததும், அவர்கள் மெளனமானார்கள். அவன் எழுந்தான். "அபா. அபா."