பக்கம்:நிழல் முகங்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 8 சு. சமுத்திரம்

என்று அரற்றினான். அவர்கள் மூலம் மடியில், ஒரு கையை ஊன்றியபடியே "அப்பாவுக்கு எப்படி இருக்கு" என்று சைகை செய்தான். "இருப்பர்ரா. இறப்பாரா” என்று கைகளை பொம்மை போல் குவித்தும், தலையைச் சாய்த்தும் சைகை செய்தான். அவர்களால், அவன் கேள்விக்கு விடையளிக்க முடியவில்லை. அவன் கண்களில் தேங்கிய நீரைப்பார்த்து விக்கித்துப் போனார்கள். அவர்களின் கொடுர மெளனத்தை, அவன் எமத்தனமாக எடுத்துக் கொண்டான். ஏங்கி ஏங்கி அழுதான். "அபா. அபா." என்று அரற்றினான்.

அந்தோணியும், பலராமனும் விக்கித்து வேர்த்தார்கள். இந்த மாதிரி அவன் அழுவதை, எப்போதும் பார்த்ததில்லை. இப்படிப் புலம்புவதை என்றுமே கேட்டதில்லை. முன்புகூட, அந்தோணியோ அல்லது அண்ணாமலையோ அடிக்கப் போனபோது நரி மாதிரி ஊளையிடுவான். அப்போது அந்தச் ஊளைச் சத்தத்தில் ஒரு பாசாங்கு இருக்கும். ஒரு நையாண்டித்தனம் ஒலிக்கும். இலைமறை காய்மறைவான இளக்காரம் இருக்கும்.

ஆனால் இப்போதோ

அவன் தன் தலையிலும், வாயிலும் அடித்துக் கொண்டான். அடிக்கு அடி, "அபா அபா" என்று, அந்தோணியின் முட்டிக் கால்களை கைநகத்தால் பிராண்டிக் கேட்டான். அவன் கண்ணிர், அந்தோணியின் மடியில் மழைச் சொட்டுக்களாக விழுந்தது. அந்தோணி தன்னைச் சுதாரித்தபடி, "அவருக்கு ஒன்றும் ஆகலடா. ஆகாதுடா." என்று சொல்லப் போனான். கூடவே, தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவானா சுந்தரத்தின் உருவத்தை முழுமையாக உருவகப்படுத்திப் பார்த்தான். அவனால், அந்தச் சிறுவனுக்கு ஆறுதலளிக்க முடியவில்லை. அவனுக்கே ஆறுதல் தேவைப்பட்டது. பேசினால், விம்மி வெடிக்கப் போவது தெரிந்தது. உதடுகளைக் கடித்து, கண்ணிரை நிலைப்படுத்திக் கொண்டான். பலராமன்தான், அதட்டலர்கப் பேசினான்.

"இப்போ இன்னாடா நடந்துட்டு...? ஏண்டா இப்படி அழுவுறே.?"

சோமையா, குறுக்கிட்டான்.

"டேய் பலராமா. அவனை அழவிடுடா. அவன் மனசுல இருக்கிற அத்தன பாரமும் கண்ணிர்ல கரையட்டுண்டா... அந்தோணி. நீ இவனை அந்த ரயிலுலயே போக விட்டிருக்கணும் ஒருவேளை இவனைப் பார்த்தால் சுந்தரண்ணன் சுகப்படலாம்

பாரு..."