பக்கம்:நிழல் முகங்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 - சு. சமுத்திரம்

அண்ணாமலை, அவன் கண்ணிரைத் துடைத்தபடியே, ஒரு நாற்காலியில் உட்கார வைத்தான். ஒருவன், சோடாவைக் கொண்டு வந்தான். பையன், அதை வேண்டாமென்று சைகை செய்த கையோடு, தன்னைக் கூட்டிக் கொண்டு உடனே போகும்படி சமிக்ஞை செய்தான். அண்ணாமலையை கையெடுத்துக் கும்பிட்டான். பிரேக்கைக் காட்டி முறையிட்டான். அண்ணா மலையும் சமயோசிதமாகச் சொன்னான்.

"ஸ்டேஷன் வரட்டும் இறங்குவோம்."

ரயிலை, அவன் நாடி நரம்பு மாதிரி இழுத்து இழுத்து, எக்கி எக்கி ஓடிக் கொண்டிருந்த எஞ்சின், அவன் இதயம் போல் புலம்பியது. சமையல் கட்டில் இருந்த குழாயடிப் பக்கம் கிளினிர்கள் கொண்டுபோன தட்டுக்களின் சத்தம், அவனுக்கு இழவு மேளம் போல் கேட்டது.

ஆனாலும், அவன் அழுகையை அடக்கியபடியே, பொறுமையாக இருந்தான். அடுத்த ஸ்டேஷனில் இறங்கலாம். எப்படியோ சென்னைக்குப் போய் அப்பாவை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அந்த எதிர்கால நிகழ்ச்சியில், திகழ்கால சோகத்தை கரைத்துக் கொண்டான். ஆனால், இடையிடையே சந்தேகம் மட்டும் வந்தது. அண்ணாமலைஅப்பா கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா? அவனிடமே சைகை செய்து கேட்டான். அவனோ. "நீ இப்போ சாப்புடு. அப்போதான் அடுத்த ஸ்டேஷனில் இறங்கலாம்” என்று சொல்லி, அவன் முன்னால் ஒரு தட்டைப் போட்டான். அந்தச் சிறுவன், அதிலிருந்த ஆகாரம் என்ன என்பது புரியாமலே, உருட்டி உருட்டி வாய்க்குள் போட்டான். அவன் தின்று முடிக்கவும், ஏதோ ஒரு ஸ்டேஷன் வரவும் சரியாக இருந்தது.

அந்தப் பையன் அண்ணாமலையின் கையைப் பிடித்தான். பிடியை விடாமலே ரயில் வாசலை நோக்கி இழுத்தான். "அப் அப்." என்று அவனைப் பார்த்ததும், "அபா. அபா." என்று தென்திசை நோக்கியும், அழுகை அழுகையாய் கேவினான். அண்ணாமலை, சோகத்தை தொண்டைக்குள்ளேயே தேங்க வைத்து பேசினான்.

"இது சின்ன ஸ்டேஷன். வேண்டாம். பெரிய ஸ்டேஷன் வரட்டும். இறங்குவோம். பாரு, ரயில் நின்ன மூணு நிமிஷத்துலயே ஓடுது பாரு..."

அந்த ஒடும் ரயிலுக்குள்ளே, அந்தப் பையன் கருப்பு வெள்ளாடு மாதிரி சுற்றினான். பெரிய நிலையத்திலும் இறங்க முடியாமல் போகலாம் என்று அண்ணாமலையின் போக்கை வைத்து, அவன் அனுமானித்தான். அவனுக்கு கோபமும் அழுகையும் மாறி மாறி