பக்கம்:நிழல் முகங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சு. சமுத்திரம்

"டேய். கதவைத் திறடா. ஒன்னைத்தான். கதவைத் திறடா..."

"கண்ணு, கதவைத் திறடா."

"டேய் சோமாறி. எச்சப் பொறுக்கி, கதவைத் திறக்கிறயா. இல்லே உடைக்கட்டுமா..?"

பயல், அசையவில்லை.

இறுதியில், அந்தோணி முறையிட்டான்.

"டேய், நீ மட்டும் கதவைத் திறக்கலே. உன்னைக் கூட்டிட்டு வந்த குற்றத்துக்காக போலீஸ்காரன் என்னைக் கூட்டிட்டுப் போவான். அப்புறம் உன் இஷ்டம்.”

கதவு, படாரென்று திறந்தது. அந்தப் பயல் வெளியே வராமல் அந்த அறையின் மூலையோடு மூலையாக ஒடுங்கி நின்றான். அண்ணாமலை, அவன் கையை பிடித்திழுத்து, வெளியே கொண்டு வந்தான். அவனை அடிப்பதற்காக கையைத் துரக்கினான். துரக்கப் பட்ட கரம் துக்கப்பட்டு நின்றது. "அப். அப்." என்று அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, தன்னிடமே ஆறுதல் கேட்ட அந்தப் பயலை மெளனமாகப் பார்த்தான்.

இதற்குள், அந்த அறைமுழுவதும், மக்கள் மயமாகியது. டிரெய்ன் சூப்பரின்டெண்ட் ஒரு சில உதவியாளர்களுடன் கூட்டத்தை கிழித்தபடியே உள்ளே வந்தார். அவர் கேட்கும் முன்னாலயே, அவரை ஒரமாய் தள்ளிக் கொண்டு போய் அண்ணாமலை நடந்த விஷயத்தைச் சொன்னான். அவரும் விட்டுக் கொடுக்கப் போவதுபோல், நின்றபோது பொதுமக்களில் ஒரு சிலர் முறையிட்டார்கள்.

"வர வர நாட்ல. ஒழுங்கு, கட்டுப்பாடு போயிட்டு. ஒரு சின்னப் பயலால் நம்ம நேரம் வீணாகுது. நேராய் பிரதமருக்கு எழுதப் போறேன்."

"எழுதுங்க ஸார். உங்க லெட்டரை அவர் எதிர்பார்த்து இருக்காராம்."

"இப்படி நையாண்டி பண்ணுனா நாடு உருப்படாது." "இவ்வளவு நடந்தும் இந்த ஆபீஸர் சும்மா இருக்கார் பாருங்கோ..?"

டிரெயின் சூப்பரின்டெண்ட், பயந்துவிட்டார். பயத்தை மறைக்க பயங்கரமாய்க் கத்தினார்.

"போலீஸ்.. இந்தப் பையனை பிடிங்க. அடுத்த ஸ்டேஷன்ல லோகல் போலீஸ்ல ஒப்படையுங்க.."