பக்கம்:நிழல் முகங்கள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 313

“யெஸ் சார்."

"இனிமேல் இந்தப் பயல் இந்த ரயிலுல வரக்கூடாது."

"யெஸ் ஸார்."

"வாட், யெஸ் ஸார். அவனைப் பிடிங்க."

ரயில் போலீஸ்காரர்கள், அந்தச் சிறுவன் பக்கமாக நகர்ந்தார்கள். சர்வர்களால், பொறுக்க முடியவில்லை. அந்தோணி தன் தலையை மறைக்காமலே எச்சரித்தான்.

"ஸார். இது அநியாயம். நம் தோழர்களில் ஒருவர் சாகக் கிடக்கார். அவரைப் பற்றி நினைக்கக்கூட நமக்கு நேரமில்ல. ஆனால், இந்தப் பையன் அவருக்காக அழுகிறான். தன்னோட சோகத்தை இப்படி காட்டிட்டான். இவனை நீங்க போலீஸ்ல ஒப்படைக்கிறதாய் இருந்தால், நீங்க எங்களையும் ஒப்படைக்க வேண்டியது வரும்."

"அப்படின்னா..?"

"ரயில் புறப்படும் போதெல்லாம் நாங்க நிறுத்துவோம். எல்லோரும் சேர்ந்து நிறுத்த மாட்டோம். ஒவ்வொருவராய் ஒவ்வொரு இடத்தில் நிறுத்துவோம். இந்தப் பயல் இல்லாமல், ரயில் எப்படி டில்லிக்குப் போகுதுன்னு பார்த்துடலாம்."

பொதுமக்கள் மத்தியில் லேசான முணுமுணுப்பு. சீக்கிரமாய் டில்லிக்குப் போக முடியாதோ..? வண்டி ஏற்கனவே லேட்டு.

"சரி. ஏதோ நடந்தது நடந்துட்டு. அவனை போலீஸ்ல ஒப்படைக்கிறதால, ரயில் இந்நேரம் போக வேண்டிய இடத்துக்கு தாவிக் குதிக்காது. சூப்பரின்டெண்ட் லார் கண்டுக்காதிங்க."

"அதெப்படி, ஒங்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டுட்டே?”

'விட்டுத் தள்ளுங்க... ஸார். உங்க டிபார்ட்மெண்ட்ல எத்தனையோ அசெளகரியம், ஸ்டேஷன்ல ரிசர்வேஷன் கவுண்டர்ல புல்னு இருக்கும். ஆனால், டிராவல் ஏஜென்ஸியில் டிக்கெட் வாங்கிக்கலாம். வெயிட்டிங் லிஸ்ட்ல சீனியருக்கு பெர்த் கிடையாது. விஸ்ட்ல இல்லாத ஆசாமி ஹாயா துரங்குவார். கனெக்ஷன் டிரெயினுக்கு எழுதிப் போடுவோம். கேட்டால், எரிஞ்சு விழுவாங்க. மழை வந்தால். கம்பார்ட்மெண்டே குளமாகும். இந்த அசெளகரியங்களில் இது எவ்வளவோ தேவல."

சூப்பரின்டெண்ட் தனக்குச் சூடாகவும், சுவையாகவும் தேநீர் கொடுக்கும் சர்வர்களை ஒரக்கண் போட்டு கண்ணடித்தபடியே, 'பிகு செய்தார். உடனே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் (தி. த.