பக்கம்:நிழல் முகங்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சு. சமுத்திரம்

கொண்டு, அண்ணாமலை, அந்தச் சிறுவனை அடித்தான். கைகளை குவித்து, உள்ளங்கையை பள்ளமாக்கி, பயங்கரமாய் அடிப்பது போல் அடித்தான். எல்லோரும் அச்சச்சோ போட்டார்கள்.

இதற்குள், பல சர்வர்கள் கீழே இறங்கி, தட்டுக்களையும், டம்ளர்களையும் தேடிக் கொண்டிருந்தார்கள். அண்ணாமலை, அந்தப் பயலைப் பார்த்துக் கத்தினான். அவனைக் கண்ணடித்தபடி பொய்யாய் கத்தினான். பொய்க்கத்தல் என்பதால், அது பலமாகக் கேட்டது.

"பெரிய மகராசான்னு நெனப்போ..? கீழே இறங்கி போட்டது களை பொறுக்கிட்டு வாடா, பொறுக்கி கஸ்மாலம்."

அந்தச் சிறுவனும், கீழே இறங்கினான். சிறிது நேரத்தில் ஒப்புக்கு அவன் கையில் இரண்டு தட்டுக்களை திணித்தபடி, ஒரு சர்வர் இவனை மேலே கொண்டு வந்தார். பொதுமக்கள் கலைந்தார்கள்.

டிரெய்ன் சூப்பரின்டெண்ட் "பயல் மறுபடியும் எதையும் எரிஞ்சு டாமல் பார்த்துக்கங்கோ. அப்படியே எரிஞ்சாலும் டிரெய்னை நிறுத்தாதிங்க. சரி. சரி. ஏதோ தங்க நகை கீழே விழுந்துட்டதா. இந்த புகார் புத்தகத்துல எழுது. இவன் நல்ல பயல்தானே, ஏன் இப்படிப் பண்ணுனான். ஒ. அதுனாலாயா." என்றார்.

ஒரு சர்வர், அவருக்கு சூடான டீயும், சுவையான மசால் வடையும் கொண்டு வந்தார்.

கால்மணி நேரத்தில் ரயில் ஒடத் துவங்கியது.

ઉગ્રે

مميصيم

அந்தப் ரயில்பயல், இப்போது வேறு ரயில் வண்டியில் கிடந்தான்.

ஒரே கூட்ட நெரிசல். அவன் அங்குமிங்குமாகத் தள்ளப் பட்டான். ஆனாலும், அது அவனுக்கு உறைக்க வில்லை. இந்த ரயில் எங்கே போகும் என்பதும் அவனுக்குத் திட்ட வட்டமாகத் தெரியாது. ஒரு அனுமானந்தான். எஞ்சின் தெற்கு நோக்கி நிற்கிறது. வடக்கே போகும் ஜி.டி.யை விட, இது தேவலை, தமிழ்நாட்டிற்குத்