பக்கம்:நிழல் முகங்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 215 தான் போகும். இல்லையானாலும் அதனருகே போகலாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்: அவன் எதிர் பிளாட்டாரத்தையே வெறித்துப் பார்த்தான். சிறிது நேரத்திற்கு முன்புவரை, ஜி.டி. எக்ஸ்பிரஸ்ளப்ால், வேலி போட்ட அந்த பிளாட்பாரம் வெறிச்சோடி கிடந்தது. அந்தச் சிறுவன் தன் சாமர்த்தியத்தைக்கூட லேசாக மெச்சிக் கொண்டான். அவன் செய்த அமர்க்களத்திற்குப் பிறகு, பழக்கப்பட்ட அந்த ஜி.டி. எக்ஸ்பிரஸ் புறப்பட்டபோது, அவன் குத்துக் காலிட்டு உட்கார்ந்தான். நொடிக்கு ஒரு தடவை "அபா. அபா." என்று மனதுக்குள் கூவிக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குள் ரயில் பெரிய நிலையத்தில் நின்றது. சர்வர்கள் பயணிகளுக்கு பறிமாறுவதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அண்ணாமலை, சமையல் கட்டுப்பக்கம் இயங்கினான். அந்தப் பயல், அங்குமிங்கும் பார்த்தான். இந்த ரயிலில் போனால், அப்பாவைப் பார்க்க நான்கு நாட்கள் ஆகும். அதற்குள் அவர். ரயில்பயலால் மேற்கொண்டு நினைத்துப் பார்க்க முடிய வில்லை. எப்படியாவது கீழே இறங்கிவிட வேண்டும் என்று திட்ட வட்டமாக முடிவு எடுத்தான். இறங்குவதற்காக எழுந்திருக்கக்கூடப் போனான். மூளையில் உதித்த ஒரு சின்ன புத்திசாலித்தனம், அவனை தடுத்தது. இப்போது இறங்கினால், எப்படியாவது தேடிப் பிடித்து விடுவார்கள். வண்டிக்கு விசிலடிக்கும்போதுதான் இறங்க வேண்டும். ரயில் அசைவது வரைக்கும் அவன் அசைவற்றுக் கிடந்தான். 'அபாவை விரைவில் பார்க்கப் போகிற சந்திப்புப் கிறக்கத்தில் அசந்திருந்தான். சிறிது நேரத்தில், விசில் சத்தம் கேட்டது. அவன், அந்த ஊதல் சத்தத்தை தனக்காக ஒலிப்பதாய் எடுத்துக் கொண்டு, எஞ்சின் ஊளையிடுவதற்கு முன்பே எழுந்தான். அது லேசாய் அசைந்து, ரயில் பெட்டிகளை ஆட்டுவித்தபோது, வேகவேகமாய் நடந்து, அங்குமிங்குமாய்ப் பார்த்து, கீழே இறங்கினான். ரயில் வண்டி அவனைக் கடந்தபோது, அதற்கு அவன் முதுகைக் காட்டினான். அது முற்றிலும் அவனைக் கடந்த பிறகு, மெள்ள மெள்ள நகர்ந்து, அப்புறம் பரபரப்பாய் ஒடி, இந்த ரயிலுக்குள் ஏறிவிட்டான். அந்தச் சின்னஞ்சிறு பெரிய மனிதன் அத்தனை கூட்ட நெரிசலுக்குள்ளும் குத்துக் காலிட்டு உட்கார்ந்தான். அந்தக் கணத்தில் அவனுக்காக வாதாடிய ஜி.டி. எக்ஸ்பிரஸ் அப்பாக்கள் தன்னைக் காணாமல் துடித்துப் போவார்களே என்ற