பக்கம்:நிழல் முகங்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சு. சமுத்திரம் எண்ணம் அவனுக்கில்லை. அவர்கள் போகும் நிறுத்தப்பட்டு அமர்க்களப்பட்டதோ.. அத்தனைத் தொழிலாளர்களும் அவனுக்காக வக்காலத்து வாங்கி, அவனை நிரந்தரமான தடையில் இருந்து காப்பாற்றியதோ அவனுக்கு உறைக்கவில்லை. அவன் ஒவ்வொரு அணுவிலும் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், மூச்சின் ஒவ்வொரு இழுப்பிலும், உடம்பின் ஒவ்வொரு அசைவிலும் வியாபித்திருந்தவர் சுந்தரம். சுந்தரமே அவன்கூட அவன் உடம்பில் இல்லை. அவன் மனம் முழுவதும் மருத்துவ மனையாக வியாபித்து. அங்கே சுந்தரம் அங்குமிங்குமாய் புரண்டு கொண்டிருந்தார். கடந்தகால சின்னச் சின்ன நிகழ்ச்சிகள், அவன் மனதுக்குள் பெரிது பெரிதாய் நிழலாடின. அவனுக்காக, தனக்கு வந்த சாப்பாட்டுக் கேரியரையே, அவன் முன்னால் வைத்துவிட்டு, "எனக்கு வயிறு சரியில்லை. நீ சாப்பிடு." என்று சொன்ன சுமந்து பெறாத சுந்தரத்தாய். அவன் சிரங்குக்கு தன் கையாலேயே மருந்து போட்ட சுந்தர வைத்தியன். அவனை யாராவது கிண்டல் செய்தால். அவரை பார்வையாலேயே மடக்கும் கந்தரத் தோழன். அவனுக்காக வாழ்வதுபோல் தன்னை மாற்றிக் கொண்டு குடும்பப் பொறுப்பைக்கூட மறுக்கும் அல்லது மறக்கும் சுந்தரத்தியாகி. அவனைச் சேர்ந்தாற்போல் பார்க்காவிட்டால் துடித்துப்போகும் அந்தச் சுந்தரத் தந்தை. அந்தப் பயல் மனம், சுந்தரமாகியது. பாச நெகிழ்ச்சி அவனை பந்தாடியது. தன்னைப் பார்த்து விட்டால், அப்பா பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணம், அவன் உள்ளத்தை எஞ்சினாக்கியது. உடம்பை ரயில் பெட்டியாக்கியது. சுந்தரம் என்ற தோழன், அவன் மனதுக்குள் ரயிலானார். ரயில் ஒடிக்கொண்டே இருந்தது. அந்தப் பூஞ்சை உடம்பால், இரும்புக் கூட்டத்தை தாங்க முடியவில்லை. மெள்ள எழுந்தான். அவன் இருந்த இருப்பையும், நோக்கிய நோக்கையும் கண்டோ என்னவோ கூட்டம், பட்டும் படாமலும் அவனுக்கு வழி விட்டது. அவன், அந்த ரயிலுக்குள்ளேயே ஒரு ரயில் மாதிரி ஓடினான். முதலாவாது வகுப்போ, இரண்டாவது வகுப்போ ஏதோ ஒரு பெட்டிக்கு வந்தான். நெரிசல் அதிகம் இல்லை. வாசலோரத்தில் டிக்கெட் பரிசோதகர், கடுகடுப்பாய் நின்றிருந்தார். அவருக்குச் சற்று முன்னால், குப்பைக் கூள மனிதர்கள். பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு கால் மனிதர். கை சூம்பிய வாலிபன். தாளக் கட்டைகள் வைத்திருந்த அம்மை வடுப்பெண். பெட்டிகளைத்