பக்கம்:நிழல் முகங்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சு. சமுத்திரம்

கேட்குதோ?" என்று சொல்லிவிட்டு, வேறு எங்கேயோ பார்த்த போது, அந்தப் பயல் பலராமனை, செல்லமாகத் தள்ளினான். பலராமன், அவன் தள்ளலால் நகர்ந்தவன்போல் பாசாங்குத் தனமாய் நகர்ந்து, மீண்டும் தனது இருக்கையிலே விழுந்தான். பயலுக்குக் கைவலிச்சது தான் மிச்சம். பிறகு நாராயணனைப் பார்த்து "அப். அப்." என்று கூவியபடியே, பலராமன் இருக்கையை வாங்கித் தரும்படி சமிக்கை காட்டினான். நாராயணனுக்கு மனசு இளகியது. - -

டேய் பலராமா. அந்த இடத்தை விட்டுடு துரைக்கு அதுதான் வேணுமாம்."

"அவன் கேட்டதையெல்லாம் கொடுத்துடனுமா? அப்புறம் என்னவெல்லாமோ கேட்பான்."

"சரிதாண்டா, ஒழிஞ்சு போறான்."

"ஒழிஞ்சு போகப்படாதுன்னுதான் கொடுக்கல. கையை வெளில நீட்டுவான். தந்திக் கம்பத்துல அடிபடும்."

"அந்தக் கதையே வேணாம். விட்டுக் கொடு."

"இதுக்கு மேல பேசாதடா"

'எதுக்கு மேலயும் பேசுவேன். ஏன்னா அது என்னோட சீட்டு. தோ. நான் இருக்கேனே. அதான் ஒன்னோட சீட்"

பலராமனின் சிரித்த முகம் கறுத்தது. மடமடவென்று எழுந்தான். அந்தச் சிறுவனைப் பார்த்து "மவராசனாய் உட்காருடா" என்றான். பயல் உட்காராமல், அப்படி பேசியவனையே பார்த்தான். உடனே பலராமன், நாராயணனிடம் இருக்கும் கோபத்தைக் காட்டும் வகையில் அந்தப் பயலை, தோளை அழுத்தி உட்கார வைத்தான். ஆனால், பையனோ மீண்டும் எழுந்தான். அப்புறமும் பலராமன் "ஒனக்காக அந்தோணிய கிச்சுக் காட்டுனேன் பாரு. எனக்கு இதுவும் வாணும். இன்னமும் வாணும்." என்று சொன்ன படியே அந்தப் பயலைத் தோளைப் பற்றிக் கட்டாயமாக உட்கார வைத்தான்.

இப்படி, பலராமன் அந்தச் சிறுவனை இருகரங்களால் தோளை அழுத்தி ஜன்னலோர இருக்கையில் உட்கார வைப்பதும், அவன் கை விடுபட்டதும், பயல் எழுந்திருப்பதும் பல தடவை நடந்து கொண்டிருந்தது. ஒரு குரல் பேசிக்கொண்டே உள்ளே வந்தது.

"பச்சை மண்ணை ஏன்டா இந்தப் பாடு படுத்துறே.?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/23&oldid=588192" இலிருந்து மீள்விக்கப்பட்டது