பக்கம்:நிழல் முகங்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 317 துடைத்து வயிற்றைத் துடைக்கும் ஒரு விடலைப் பையன். வயதான கிழவி. அத்தனை பேரும், அந்த பரிசோதகரை பரிதாபத்துடன் பார்த்தார்கள். ஒரு எதிர்பார்ப்போடு பார்த்தார்கள். அவரோ, ஏற்கனவே முடிவெடுத்துவிட்ட முகபாவத்தோடு நின்றார். ஏதோ ஒன்று திருடு போய்விட்ட்து என்று ஒரு பயணி. ரயில்வே புகார் புத்தகத்தில் எழுதி விட்டாராம். டிக்கெட் இல்லாத பஞ்சை பனாரிகளை டிக்கெட் பரிசோதகர்களின் பரிபூரண சம்மதத்துடன் ரயில் பெட்டிகளுக்குள் நடமாடுவதே, திருட்டுக்கு மூல காரணம் என்று எழுதிவிட்டாராம். அந்தப் புகாரின் பேயுருவம், டிக்கெட் பரிசோதகர் என்ற ஆலமரத்தை பிடித்ததுடன், அதனுள் அடங்கிய இந்த தெருப் பிள்ளையார்களையும் பிடித்துக் கொண்டது. அவர்களை மட்டுமா? நமது ரயில் பயலையும் சேர்த்துத்தான். டிக்கெட் பரிசோதகரை, அவன் பிடறியில் பலமாக அடிக்க வைத்தது. அவனை கீழே விழ வைத்தது. அவனைச் சுற்றி, மேலும் பல அதிகாரிகளை சூழ வைத்தது. દ્વઉગ્રે அந்த இனந்தெரியாத ரயில், முகமறியாத மக்களோடு, திசையறியாத பாதையில் போவதை புரிந்து கொண்டான் ரயில் பயல். ரயில் பயல், கீழே அப்படியே விழுந்து கிடந்தான். அவன் எழுந்ததும், இன்னொரு உதை கொடுத்து, அவனைக் கீழே வீழ்த்த வேண்டும் என்று கைகளை விறைத்து வைத்திருந்த அதிகாரிகளுக்கு அசந்து போனது. அவன் எழுந்து நிற்கவில்லை. பதறிப்போன ஒருவர், அவனைத் துக்கி நிறுத்தினார். அவன் இன்னும் ஒரு உதையைத் தாங்கிக் கொள்வான் என்பதுபோல், ஒருத்தர் அடிக்கப் போனார். ஆனால், அந்த நிர்மலமான கண்களையும், பேசத்துடித்து தோல்வியுற்ற உதடுகளையும் கண்ட இன்னொருத்தர், அடிக்கப் போனவர் கரத்தை, அடிப்பதுபோல் பற்றிக் கொண்டார். இவ்வளவுக்கும் அந்தப் பயல், டிக்கெட் பரிசோதகர்களையும், இதர அதிகாரிகளையும் பார்த்தவுடன், அவனாகத்தான் வலியப் போனான். அந்த ரயில் எங்கே போகிறது என்று வாய் மொழி அறியா அந்தப் பேதைப் பொடியன் கை மொழியால் கேட்கப் போனான். அவன் தோரணையைப் பார்த்தவர்கள், அவன் டிக்கெட்