பக்கம்:நிழல் முகங்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சு. சமுத்திரம் வைத்திருப்பான் என்றுகூட நினைத்து, அவனிடம் ஒப்புக்குத்தான் 'டிக்கெட் என்றார்கள். உடனே இல்லை என்று கையசைத்து சைகை செய்தான். ரயில்வே அதிகாரிகளும், அவனுக்கு சைகையாலேயே பதிலளித்தார்கள். அவன் பிடறியைத் தட்டி, கீழே போட்டார்கள். அந்தப் பயல், இதரப் பயல்களோடு நிறுத்தப்பட்டான். அந்த நிலையிலும், அவனுக்கு அடிபட்ட உணர்வு இல்லை. அப்பா சுந்தரத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு தாங்கொண்ணா வேட்கைத் தாக்கத்தில் அலைமோதினான். ரயில்வே அதிகாரி களிடம் கைகால்களால் மன்றாடி மன்றாடி முறையிட்டான். இந்த ரயில்கள்தான் தனது இல்லம் என்று கீழேயும் மேல்ேயும் கைகாட்டினான். "அப். அப்." என்று சென்னை நகரம் இருப்பதாக நினைத்துக் கொண்ட திசையை நோக்கி கையாட்டினான். ஆனால், அவன் முறையீடோ அவர்களின் கோபத்தை தீவிரப்படுத்தியதே தவிர, சிகிச்சையளிக்கவில்லை. இது போதாதென்று "ஒனக்கு ஆறுமாதம் வாங்கித் தாறேன் பார்" என்ற அர்த்தத்தில் ஏதோ ஒரு மொழியில் ஆறுவிரல்களை மடித்துக் காட்டினார் ஒருவர். அப்போதுகூட, அப்பாக்கள் இருந்த அந்த பாசரயிலை விட்டுவிட்டு, இந்தப் பாழும் ரயிலுக்கு வந்ததற்காக, அதிகமாக அவன் வருத்தப்படவில்லை. அவன் ஊனுடம்பு- உயிரனைத்திலும் ஒரே சிந்தனை. அப்பாவைப் பார்த்தாக வேண்டும். பார்த்தே ஆகவேண்டும். என்ன ஆனாலும் சரி, எப்படியானாலும் சரி. அந்த பூஞ்சைப் பையனைச் சிறைப்படுத்திய, அந்த புதிய ரயில் மணிக்கணக்கில் ஒடிக் கொண்டிருந்தது. காலேஸ்வரனின் இரவு என்னும், பெண்பாதிக்குள் ஒடி முடித்த அந்த இரும்பு வாகனம், இப்போது பகலென்னும் ஆண்பாதிக்குள் அடிபோட்டது. இதுவரை காலம் என்ற காரணங்கள் தெரியாமல், எல்லாக் கிழமைகளும் ஒரே கிழமையாக, எல்லா நேரமும் ஒரே நேரமாக, வாழ்ந்த அந்தப் பயல், ஒவ்வொரு வினாடிக் கழிவிலும் உயிர் போவதுபோல் துடித்தான். காலநேரம் தெரியாமல் பயணித்தவன், இப்போதோ, காலனுடன் போராடும் சுந்தரம் அப்பாவிற்கு கடைசி காலம் வந்து விடக்கூடாது என்று, கடைசி முயற்சி கிடைக்குமா என்று , அங்கு மிங்கு மாய் பார்த்து க் கொண்ட படியே அல்லாடினான். மத்தியானவேளை. ரயில்வே அதிகாரிகள் வாங்கிக் கொடுத்த ரொட்டித் துண்டுகளை அவன் வாங்கிக் கொள்ள மறுத்தான். 'பெரிய மகாத்மா காந்தி என்று அவர்கள் சொன்னபோது, அவனுக்கு என்னமோ சுந்தரம் அப்பாவின் நினைவுதான் அப்போது நெஞ்சில் நிழலாடியது.