பக்கம்:நிழல் முகங்கள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

દ્વઉષ્ટ அந்த புதிய ரயில், வில்வண்டிக் கூடு மாதிரியான மேற்கூரை கொண்ட ஹைதராபாத் ரயில் நிலையத்திற்குள், வேகம் தணித்து துழைந்தது. அங்கேதான் டிக்கெட் இல்லாதவர்களை இறக்க வேண்டும். அதிகாரி க ள் எழுந்து சட்டைகளை இழுத்து வி ட் டு க் கொண்டார்கள். தூசிகளைத் தட்டிவிட்டார்கள். அந்தச் சமயத்தில் இந்தப் பயல் திடீரென்று ஓடினான். அவர்களை விட்டு, சென்னை இருக்கும் தென்திசைக்குப் போகப் போவதுபோல் ஓடினான். அந்த ரயிலுக்குள்ளேயே ஒரு ரயில் மாதிரி ஓடினான். அந்த ரயில் எஞ்சின் மாதிரி உருமியபடியே ஒடினான். நரிபோல ஊளையிட்டபடியே தாவினான். அதிகாரிகள் சுதாரித்தார்கள். "பிடி பிடி" என்று கத்தியபடியே பின்னால் ஓடினார்கள். அவனோ ரயில் பெட்டிகளுக்குள் வளைவு வளைவாக வளைந்து, தாவு தாவாகத் தாவி ஓடினான். ஆனாலும், மனோ வேகம், உடல் வேகமாகவில்லை. இனிமேல் ஓட முடியாது என்று ஐம்புலன்களால் அறிந்து, தனியறையாய் இருந்த ஒரு பெட்டிக்குள் ஓடினான். அந்த முதல் வகுப்புப் பெட்டியில் இருந்க இரண்டு பேரில், ஒரு வயதானவரின் காலுக்கடியில் போய் பதுங்கிக் கொண்டான். அவர், அவனை பன்றிக் குட்டியை பற்றுவதுபோல் பற்றி, மேலே கொண்டு வந்தார். அவனைப் பார்த்துவிட்டு, அடையாளம் காணும் வகையில் புருவங்களை உயர்த்தவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நீ. நீதானே" என்று கேட்டார். அந்தப் பயல், அவரைப் புரியாமல், தெரியாமல் விழித்தபோது, அவர் கடந்த கால நிகழ்ச்சி ஒன்றை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தார். ஒரு தடவை அவர் ஜி.டியில் போகும்போது, மூவாயிரம் ரூபாய் பெறுமான நோட்டுக்களை உள்ளடக்கிய மணிப்பர்ஸை தொலைத்துவிட்டார். ரயில் நிலையத்தில் விட்டாரா. ரயிலுக்குள் விட்டாரா அவருக்கே தெரியாது. சாப்பாட்டிற்குக்கூட தயா பைசா இல்லாத நிலைமை. அவர் இங்குமங்குமாய் அல்லோலகல்லப் படுவதைப் பார்த்து, இதே இந்தப் பையன், அவர் கையைப் பற்றினான். பிறகு கரடுமுரடான ஆட்கள் இருந்த பெட்டிக்குள் கூட்டிப்போனான். இங்கிருந்தவர்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தபோது, இவர் தனது பணப்பைக்குள் தனது புகைப்படம் இருக்கும் என்றார். அவர்கள் பிரித்துப் பார்த்து அந்தப் பையை முடியபடியே அவரிடம் கொடுத்தார்கள். அப்போது இந்தப்