பக்கம்:நிழல் முகங்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சு. சமுத்திரம் பயல் சிரித்த சிரிப்பு. அப்பப்பா. அவனுக்கே அந்தப் பணம் கிடைத்து விட்டது போன்ற சிரிப்பு. எல்லோரையும் பற்றிக் கொள்ளும் தொத்துச் சிரிப்பு. அவர், பணப்பையை நீட்டி, ரூபாய் நோட்டுக்களைக் காட்டி, எவ்வளவு வேணுமுன்னாலும் எடுத்துக் கொள் என்றபோது, ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டை மட்டும் 'அப்பா'க்களின் அதட்டலால் எடுத்தபடியே, அப்போதும் சிரித்தான். ஆனால், இப்போதோ. உடல் பரிமாணத்திற்கு, உள்ளத்தையும் விசாலமாக வைத்திருந்த அவர், அந்தப் பயலை ஆசுவாசப்படுத்தினார். அவன் கண்களைத் துடைத்து விட்டார். இதற்குள் உள்ளே வந்த ரயில்வே அதிகாரிகள், அவனை தட்டுமுட்டுச் சாமான்களை இழுப்பது போல் இழுத்தபோது, அவர் சீறினார். அதிகாரிகள் நிலைமையை விளக்கியபோது, அவர் அந்தப் பையனின் நேர்மையையும், ரயில்வே தொழிலாளர்கள் மூலம் கேள்விப்பட்ட, ரயிலோடு ரயிலாகிப் போன அவன் வாழ்க்கைப் பயணத்தையும் விளக்கினார். அவனுக்காக அவர் புறப்பட்ட இடத்தில் இருந்து, பயணச் சீட்டும், அபராதத் தொகையும் கட்டுவதற்காக, அந்தப் பயல் எந்தப் பணப்பையைப் கண்டெடுத்துக் கொடுத்தானோ, அந்த ராசியானை பையை திறக்கப் போனார். அந்தப் பணத்திற்கு ரசீது கொடுக்க வேண்டும் என்பதால், அதிகாரிகள் அதை வாங்க மறுத்தனர். அதோடு, அவர்களுக்குள்ளும், சட்டப்படி சரியில்லாத - அதேசமயம் தர்மப்படி சரியான ஒரு மனிதாபிமானம் முளைத்தது. அந்தப் பயலை, அவருடனே விட்டுவிட்டு, அவர்கள் போய் விட்டார்கள். அந்தப் பயலோ, அவர் யாரென்று புரிந்து கொள்ளவும், அக்கறை காட்டவில்லை. சர்வ நாளங்களிலும், நரம்புகளிலும் ரத்த அணுக்களிலும் சதையின் அடர்ப்புக்களிலும் வியாபித்த "அப். அப்." என்ற உணர்வை, வார்த்தையாக அரற்றினான். மெட் மெட் என்று கத்தினான். அப் என்று சொல்லிவிட்டு பரிதவித்து நின்றான். பின்னர், அந்த சொல்லுக்குரிய அவர், படுத்த படுக்கையாக இருக்கிறார் என்பதை, சாய்ந்து காட்டியவன், அவர் புரியாமல் விழித்தபோது, கீழே படுத்துக் காண்பித்தான். இடது பக்கத்து மார்பைப் பிதுக்கிக் காட்டினான். பிறகு "மெட். மெட்" என்றான். அவர் ஒன்றும் புரியாமல் விழித்து, பிறகு ஒரளவு புரிந்தது போல் "மெட்ராஸ் போகனுமா?" என்றபோது ஆம் ஆம் என்று தலையை ஆட்டினான். அந்த நன்றி மனிதர், அவனுடன் கீழே இறங்கினார். அப்போது தான் ஒரு ரயில் தெற்குநோக்கி முகம் வைத்து நின்றது. அவசர