பக்கம்:நிழல் முகங்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 221 அவசரமாக டிக்கெட் வாங்கி, அவனிடம் அன்தக் கொடுத்துவிட்டு, அவனை ஒரு ரயில் பெட்டிக்குள் ஏற்றினார். அங்கிருந்த பயணிகளிடம், அவனை சென்னையில் பத்திரமாக கொண்டு சேர்க்கும்படிச் சொல்லிவிட்டு, அவன் பையில் பத்து ரூபாய் நோட்டை வைத்தார். பிறகு யோசித்துவிட்டு, பத்துப்பத்து ரூபாய் நோட்டுக்களை திணித்துவிட்டு, அவனைப் பிரிய மனமில்லாமலே நின்றார். இதற்குள் அந்த ரயில், அவரைக் கூப்பிடுவதுபோல் ஒசை இட்டது. உடனே, அவர் ஓடினார். அப்போதுதான் சுயவுணர்வுக்கு வந்த அந்தப் பயல், அவர் போன திசையை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டான். அவன் முதல்முறையாக பயணச்சீட்டுடன் உட்கார்ந்திருந்த அந்த ஹைதராபாத் துரித ரயில் டீசல் சப்தத்துடன் புறப்பட்டது. அங்கிருந்த பயணிகள் அவனிடம், பேச்சுக் கொடுத்துப் பார்த்தார்கள். அவனோ சர்வம் சுந்தரமயமாகி கண்களை மூடிய படியே அந்த ஆஸ்பத்திரி மனிதரைப் பற்றி கனாக் கண்டு கொண்டு இருந்தான். அவ்வப்போது, ரயில் இன்னும் சீக்கிரம் போக வில்லையே என்பதுபோல் வெளியே எட்டிப் பார்த்தான். ஒரு சிலரிடம் சென்னைக்கு எப்போது போய்ச் சேரும் என்று கேட்டும் பார்த்தான். கேட்டவனுக்கு பதிலளிக்க, கேட்கப்பட்டவர்களுக்கு புரியவில்லை என்றாலும், அந்த ரயில் கூடுர் வந்தபோது அவனுக்கு வழி தெரிந்தது. ஒரு தடவை ரயில் விபத்தின் காரணமாக ஜி.டி. இந்த கூடுர் வழியாக சென்னைக்கு வந்ததை, நினைத்துப் பார்த்துக் கொண்டான். அவனைச் சுமந்து அவன் உணர்வுகளை வெளிக் காட்டுவதுபோல், அந்த ரயிலும், சிக்கு முக்குப் போட்டபடி, ஒடுர், பெடப்பரியா, நாயுடுப்பேட்டை, துறவாலிச் சத்திரம், சூலூர் பேட்டை, தடா ஆகிய ஆந்திர ரயில் நிலையங்களைத் தாவி, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுளர் ஆகிய தமிழ் ரயில் நிலையங்களைத் தாவி, பேசின் பிரிட்ஜில் குதித்து, குதித்த களைப்பில், தண்டவாளத்தில் குந்தியது. அவனுக்கு பொறுமையில்லை. அங்கிருந்து கீழே குதித்து, ரயில் மேம்பாலம் வழியாகத் துள்ளிக் குதித்து, மறுபக்கம் நின்ற மின்சார ரயிலுக்குள் அடர்த் தியான ஒரு பெட் டி க்குள் தன்னை அடைத்துக் கொண்டான். அங்கே முகம் தெரிந்தவர்கள் இருப்பார்களா என்று சுந்தரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த மின்சார ரயிலின் ஜன்னல் வழியாக, சுந்தரத்தின் பணிமனையைப் பார்த்துவிட்டு தேம்பித் தேம்பி அழுதான். உள்ளே இருந்தவர்கள் என்ன என்ன என்று கேட்டபோது, வேறு பெட்டிக்குத் தாவித் தாவி அழுதான்.