பக்கம்:நிழல் முகங்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சு. சமுத்திரம் அந்த ரயிலின் பின்பகுதியில் ஏறியவன், நேரத்தை வீணாக்க விரும்பாமல் முன்பகுதிக்கு ஒடிப் போனான். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை அழுத்தும் முன்பே, அவன் கால்கள் தரையில் பதிந்தன. அப்பா எந்த மருத்துவ மனையில் இருக்கிறாரோ என்று ஒரு யோசனை. பிறகு பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணியிடம் கேட்கலாம் என்று, அவனே, அவனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டான். அந்த நிலையத்தின் மேற்கோரம் நின்ற அவன், கிழக்கோரத்திற்கு ஓடிய போது, இடையே பலராமன் தென்பட்டான். "அடே பாவி. ஒனக்காகத்தாண்டா அங்குமிங்குமாய் அலையுறேன்." என்று சொன்னபடியே, அவன் கையைப் பிடித்துக் கொண்டான். அந்தப் பயல் அவனிடம் எப்படி இருக்கு என்று கேட்கப்போன கைகளை குறுக்கிக் கொண்டான். கேட்கப் பயம். அந்தக் கேள்விக்கு நேர்மாறாக பதில் கிடைத்துவிடக்கூடாது என்ற பயம். அதேசமயம், தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். பலராமன் மட்டும் பிடிக்கவில்லையானால் அவன், தல்ைவேறு, கைவேறாக ஆகி இருப்பான். દ્વષ્ટિ வெள்ளைக்கார பாணி கட்டிடமான தென்னக ரயில்வே அலுவலக கட்டிடத்திற்கு ஈடு கொடுக்கும் எதிர் கட்டிடங்களின் தொகுப்புக்குள் பலராமன் அவனைக் கூட்டிச் சென்றான். பலராமனுக்குப் பின்னால் நடந்த அவன், அவனுக்கு இணையாக நடந்து, முந்தி நடந்தான். பிறகு அப்பா இருக்கும் இடம் அவனுக்குத்தான் தெரியும் என்பதால், அவனுக்கு இணையாக நடந்தான். இருவரும் பல்வேறு குறுக்கு நெடுக்கு பாதைகளைக் கடந்து, இருதய சிகிக்சைப் பிரிவு வார்டுக்குள் நுழைந்தபோது வகுப்பறை மாதிரியான அந்த அறைக்குள் இரண்டு வரிசைகளில் சுமார் இருபது வெள்ளைக் கட்டில்கள். அத்தனையிலும், இதயத்தைச் சுமக்க முடியாமல் சுமக்கும் நோயாளிகள். சுந்தரம் நடுப்பகுதியில் மல்லாந்து கிடந்தார். அவர் கட்டிலின் தலைப்பக்கம் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பியில் ஒரு குறிப்பேடு தொங்கியது. அவரது சிறுநீர் சர்க்கரையின் உயர்ந்தபட்ச அளவான ஃபோர்பிளஸ் என்று காட்டும் ஒரு குறிப்பு. அவரது