பக்கம்:நிழல் முகங்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 223 ரத்த சர்க்கரையின் கொடுங்கோல் அளவான 400 ஐக் காட்டும் குறிப்பு கொழுப்புச் சத்தும் கூடியிருப்பதைக் காட்டும் குறிப்பேடு. இ.சி.ஜி. எனப்படும் இதயத்தின் இயல்பையும், செயல்பாட்டையும் கோடு கோடுகளாகக் காட்டும் வரைபடம். இதுவும் போதாதென்று, 120-180 என்று அளவு காட்டும் ரத்த அழுத்தக் குறிப்பு. சுந்தரத்தின் கட்டிலைச் சுற்றி அவரது மனைவி. குற்ற உணர்வுடன் நின்றாள். அவள், அங்கேயே நான்கைந்து நாட்களாக கிடக்கிறாள் என்பதை அவளின் கலைந்த கூந்தலும், களைப்பான முகமும் காட்டின. கந்தரத்தின் மகள், சோகத்தால் அலங்கோலமாக நின்றாள். அவளுக்கு இரட்டைக் கவலை. இப்படி இருக்கும் அப்பா எப்படி ஆகப் போகிறாரோ என்ற பழைய கவலை. அழைப்பிதழ் வரைக்கும் அச்சாகிப்போன தனது திருமணம் அப்பாவோடு அமரத்துவமாகி விடுமோ என்ற புதுக்கவலை. இன்னும் நான்கைந்து பேர். சுந்தரமோ, கண்களை மூடிக் கிடந்தார். புறக்கண்களை மூடி, அகக் கண்களை திறந்திருப்பது போன்ற தோரணை. உண்மைதான். வாழ்வே மாயம் என்று அவரும் சொல்லியிருக்கிறார். பிறர் சொல்லியும் கேட்டிருக்கிறார். ஆனால் இந்த தத்துவம், தன்னையே தாக்கும் போதுதான், அதன் முழுத் தாத்புரியமும் அவரை திக்கு முக்காடச் செய்தது. பணிமனையில் வேலை, பதவி உயர்வுக்காக அலைச்சல்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள், மனைவி மக்கள், தோழர்கள், சொந்தங்கள், ஆகிய அனைத்தும் கூட வரா என்பதும், ஒருவரின் பிரான வலியை ஆயிரம்பேர் அருகில் இருந்தாலும் அவர்தான் தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை உண்மையும், அவரை வாழ்வின் அடிப்படையையே புரட்ட வைத்தது. வாழ்க்கை ஒரு மாயையாகவும், உணர்வுகள் அனுமானங் களாகவும் வாழ்தல் ஒரு வீண் முயற்சியாகவும் தோற்றம் காட்டின. இறந்தவர்கள் எண்ணிக்கை, இருப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். பிறப்பிலேயே இறப்பும் பிறக்கிறது. ஆனால், இந்த மனிதர்கள் இந்த உலகில் நிரந்தரமாய் இருக்கப் போவதுபோல் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? அடிதடி போடுகிறார்கள்? இதுதான் மாயை என்பதோ... அல்லது இந்த நிரந்தரத்துவம் என்ற போலியுணர்வு இல்லையானால், மானுடம் நிரந்தரமாகாது என்று இவர்களை இயற்கை போட வைக்கும் நாடகமோ. நாடகமே வாழ்க்கை என்றார்கள். தவறு. வாழ்க்கையே நாடகம், ஒரு கூத்து. கூற்றுவன். நிறைவு செய்யும் போலிக்கூத்து. ஒரு வாரத்திற்கு முன்புவரை கல்லுப் பிள்ளையாராக இருந்த சுந்தரம், இப்போது அடி சாய்ந்த கல்லாகக் கிடந்தார். அவருக்