பக்கம்:நிழல் முகங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சு. சமுத்திரம் குள்ளே பகவத் கீதையும், பைபிளும் மாறிமாறி உபதேசிகளாய் தோன்றினாலும், அவருக்கென்னவோ மரணபயம் போகவில்லை. மரணத்தை எதிர்கொள்ள அச்சப்பட்டார். மகளின் திருமணம், நண்டும் சிண்டுமாக இருக்கும் குழந்தைகள், எல்லாவற்றிற்கும் மேலாக ரயில் பயல், இவர்களை விட்டுப் போக அவருக்கு மனமில்லை. மனைவிக்கு, மகள் இருக்காள். மகளுக்கு, மனைவி இருக்காள். ஆனால், நான் பெறாமல் பெற்ற அந்த பிள்ளைக்கு யார் இருக்கார்? ஆன்மாவுடன் ஐக்கியப்பட்ட அவனை பார்த்து விட்டால் போதும். அவன் 'அப் என்று சொல்வதைக் கேட்க வேண்டும். அவன் மெய் தீண்டலை உணர வேண்டும்: 'இது என்ன பைத்தியக்காரத்தனம். அவன் யார்? நான் யார்? அட சரிதாம்பா. முதலில் நீ யார்? இன்றோ என்றோ போகப் போகிறாயே அந்த உலகம் ஏது? எல்லோரையும் விட்டுவிட்டு, தனித்துப் போகப்போகிறாயே, அந்த உலகிற்கும் உனக்கும் எவ்வளவு தொடர்போ. அவ்வளவு தொடர்பு உனக்கும். அந்தப் பையனுக்கும்: சுந்தரம், தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். ரத்த பந்தம் அவரை உடலாட வைத்தது என்றால், இந்தப் பந்தம் அவரை உயிராட வைத்தது. இந்தச் சமயத்தில் சுந்தரத்தின் மனைவி, "வாப்பா. நீ வந்த வேளையாவது என் மவராசா பிழைக்கட்டும். ஒன்னைத்தாண்டா. என் சீமான் ஒன்னைத்தான் நினைச்சுட்டு இருக்கார், அப்பாகிட்டே போடா” என்றாள். சிறிது நேரம்வரை அப் சுந்தரத்தையே வைத்த கண் வைத்தபடி, பார்த்தபடி நின்ற ரயில் பயல், மெளனமாக நகர்ந்தான். பிறகு, ஒடிப்போய், சுந்தரத்தின் கால்களை கட்டிக் கொண்டு "அப். அப்." என்றான். அவரது பாதங்களுக்கு இடையே தலையைக் கொண்டு அங்குமிங்குமாக ஆட்டினான். கட்டில் விளிம்பில் தன் நெற்றியை முட்டினான். பிறகு அப்பாவிற்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பதுபோல் அவர் பாதம். நோகாமல் தலையைத் தூக்கினான். மெல்ல எழுந்து, மெள்ள மெள்ள நடந்து, அவரது முகத்தருகே போனான். 'அப். அப். என்று அவன், ஒரு திருவுறவின், திருமந்திரத்தை மாறிமாறிச் சொன்னபோது, அவன் கண்ணிர் சுந்தரத்தின் விழிகளில் விழுந்தன. அந்த உஷ்ணம் தாங்காமல் கந்தரம் தலையைப் புரட்டினார். பிறகு, கண் விழித்தார். இந்த விழிப்பு, இதழோரம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. அவன் பக்கமாய் தலையைச் சாய்த்தபடியே, ஒட்டிய உதடுகளுக் கிடையே நீர்கோடு போட்டார். தலையில் அடிக்கப்போன அந்தப். பையனின் கையை, பலமாகப் பிடித்துக் கொண்டார். 'உன்ன