பக்கம்:நிழல் முகங்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 225 விட்டுப் போகமாட்டேன்' என்பது போன்ற பாசப்பிடிப்பு. போனாலும் என்னை விடாதே என்பது போன்ற வேண்டுதல் பிடிப்பு. நீதான் நான் என்பது போன்ற நீக்கமற நினைத்த பிடிப்பு. சுந்தரம், ஏதோ பேசப் போனார். ஆனால், அந்தப் பயலோ, அவரைப் பேசக்கூடாது என்று அவர் உதடுகளில் ஆள்காட்டி விரலை வைத்தான். பிறகு, அவர் தலையை வருடிக் கொடுத்தான். அப் அப்' என்று மூச்சு முட்டினான். பிறகு திடீரென்று பாய்ந்து, எங்கேயோ போய்க் கொண்டிருந்த டாக்டரை இழுத்து வந்தான். அந்தச் சின்ன உடம்பின் உடும்புப் பிடியில் தானாக வந்த டாக்டர், சுந்தரத்தின் ரத்த அழுத்தத்தைப் பார்த்தார். பிறகு கத்தினார். "இப்போதான் சுகமாயிட்டு வருது. இதுக்குள்ளே என்ன கூட்டம்.? இருதய நோயாளி உணர்ச்சி வசப்படக்கூடாது. ஒரே ஒருவர் தவிர, எல்லோரும் வீட்டுக்குப் போங்க. அவருக்கு தொல்லை கொடுக்காதீங்க. இல்லாட்டி அவருக்கு விபரீதம் நடக்கும்." டாக்டருக்கு என்ன அவசரமோ. அவர்களை விரட்டாமலே போய்விட்டார். நான்கைந்து நர்ஸம்மாக்களும் ஒரு மூலையில கூட்டம் போட்டார்கள். இந்த தைரியத்தில் பலராமன் பொறிந்து தள்ளினான். "இந்த டாக்டர்களே இப்படித்தான். சுந்தரம் அண்ணன் உணர்ச்சிவசப்பட்டுப் பரவசப்படுகிறார். மனுஷன் பரவசமாய் ஆக ஆக, அன்போட நிசமான தரிசனத்தைப் பார்க்கப் பார்க்க, அவருக்கு ரத்த அழுத்தமோ, நீரிழிவோ. எதுவும் செய்திடாது. இந்த டாக்டருங்க இதுங்களை அளவுகோலில் வச்சு வாழ்க்கையில கூட்டல்-கழித்தல் கணக்கு போடுறாங்க. ஆனால், எனக்கென்னமோ எல்லாவற்றிற்கும் மேலாக இந்த அன்பு கொடுக்கிற இன்சுலினுக்கு இணையா. எந்த மாத்திரையும் வேலை செய்யாதுன்னு தோணுது. ஏன் அப்படி பார்க்கிறே சுந்தரண்ணே. எனக்கும் கொஞ்சம் சர்க்கரை ஜாஸ்தி தானாம். வேணுமுன்னா பாருங்களேன். டாக்டரோட ஊசி செய்யாத வேலையை, இந்தப் பயலோட ஊசிப்பார்வை செய்யப் போகுது. மருந்து செய்யாத வேலையை இந்தப் பயலோட பாசமே செய்யப்போகுது. சுந்தரண்ணன் சிரிக்கார் பாரு. மெள்ளமாச் சிரிங்கண்ணே. அந்த நர்ஸம்மா பார்க்கிற பார்வை சரியில்ல. அதுலயே ரத்த அழுத்தம் பத்து டிகிரி ஏறும்." சுந்தரம், பலராமனைப் பார்த்தார். லேசாக கையாட்டினார். பிறகு மீண்டும் அவர் பார்வை, அந்த ரயில் பயல்மேல் விழுந்தது; நிலைத்தது. அவனும் அவரைப் பார்த்தபடி நின்றான். இருவரும்