பக்கம்:நிழல் முகங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் I 1

பலராமன், சொன்னவனை ஏறிட்டுப் பார்த்தான். நவாப்ஜான். அவனைப்போல் இன்னொரு தோட்டித் தொழிலாளி. குல்லா போடாதவன். முஸ்லீம் என்று அடையாளம் காண்பது சிரமம். பலராமன், நவாப்ஜானிடம் முறையிட்டான்.

'ஜன்ன லோர சிட்டு எ ன் சீ ட் டு ன் னு நாராயண ன் கேட்கிறாண்டா. அண்ணன் தம்பியாய் நாம் பழகுறப்போ சட்டம் பேசுறது நாயமான்னு கேளுடா சாய்பு."

நவாப்ஜான் நாராயணனின் கண்களில் கண் பதித்து இப்படிக் கேட்டான்.

"ஏண்டா. நார்னா நாயமாடா..?"

"நான் நாரவுமுல்ல. மனக்கவுமுல்லடா. குட்டிப் பையன் ஆசைப்படுறானேன்னு கேட்டுட்டேன். இவனுக்கு ரோஷம் வரட்டுமேன்னு கேட்டேன். சில்மிஷமாய்க் கேட்கல."

"அது எனக்குத் தெரியும். ஆனாலும் "நான். நீ என்ற வார்த்தை நமக்குள்ளே வரப்பட்டாது. எனக்கு என்கிறதுக்குப் பதிலாய் எங்களுக்குன்னும், நான் என்கிறது நாமுன்னும் வரணும்."

"ஆரம்பிச்சுட்டியா ஒன்னோட துப்புறவு ஊழியர் சங்க வேலையை..?”

“நல்லாக் கேட்டடா நவாப். அந்தப் பயல்கூட எம் மனம் நொந்துட்டோன்னு உட்காராமல் நிற்கான். இதுகூட இல்ல இந்த நாராயணனுக்கு."

“ஏண்டா என் தலையை உருட்டுறே..? நான் சொன்னது தப்புத்தான்."

போதும் என்பதுபோல், பலராமன் தலையாட்டினான். ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதுபோல நின்ற அந்தப் பயலை, இழுத்துப் போட்டு, தன் மடியில் உட்கார வைத்துப் பின்னர் சாளரத்தின் பக்கம் சாய்த்தான். அப்போது இரண்டு பெண்கள், மூன்று ஆண்களோடு உள்ளே வந்தார்கள். ஒருத்திக்கு வயது இருபத்து நான்கு இருக்கலாம். கழுத்தில் மஞ்சள் லைசென்ஸ் தொங்கியது. செக்கச் சிவந்த நிறம். எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற தோரணை, இன்னொருத்தி வெண் சிவப்பு. வெறுங் கழுத்து. மஞ்சள், சரடு ப்ோட்டவள், திருமணம் ஆகாதவள்.மாதிரியும், போடாதவள் அப்படி ஆன்வள் மாதிரியும் தோன்றினார்கள். காலி இருக்கைகளில் அவர்கள் உட்காரப் போன்ார்கள். தலைமை மெக்கானிக் கோபிநாதன் வாய்விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/24&oldid=588196" இலிருந்து மீள்விக்கப்பட்டது