பக்கம்:நிழல் முகங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சமுத்திரம் முற்போக்கு முகாமிலுள்ள முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். இந்த நாவலில் மலேசியப்பெண்ணான தமிழ்ச்செல்வி நமது நாட்டில் உறவுக்காரர்களால் கைவிடப்பட்டு பட்டாளி வர்க்கத்தால் தங்கிக் கொள்ளப் படுவதை மிகச் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார். ரயில்வே தொழிலாளர்கள் ஒரு அைைதச் சிறுவனை எடுத்து வளர்ப்பதையும், அவனுள் எழும் மனிதாபி மனத்தையும் சிறப்பாகப் படைத்திருக்கிறார். பொதுவாக, யதார்த்தமாக எழுதும்போது அதில் அவை குன்றுவது இயற்கை ஆனால், சு. சமுத்திரம் எதையுமே சுவையாக எழுதக்கூடியவர். இந்த நிழல் முகங்கள் நாவலிலும் இந்த முத்திரை, ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்துள்ளது. - கே.எம். முத்தையா, மக்கள் இலக்கிய ஆசான்.