பக்கம்:நிழல் முகங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 க. சமுத்திரம்

"ரயில்வே தொழிலாளிகளுக்காக உள்ள இடங்கள். நீங்க அதுல உட்காரக்கூடாது. உட்கார முடியாது."

அந்தப் பெண்களின் கூட வந்த ஆடவர்களில், ஒரு ஒல்லியான மனிதர், எ ல்லோரையும் பொதுப் படையாகப் பார்த்து முறையிட்டார்.

"இவள் என் சகோதரி. அவள் என் சித்தி மகள். ரெண்டு பேரும் டில்லியில் கிளார்க்குகளாய் வேலை பார்த்தாங்க. இப்போ சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போறாங்க. நான் இந்த நகரத்துல பொதுப் பணித்துறையில் இருக்கேன். நேற்றைய ரயில்ல வந்த இவங்களைத் தெரியாத்தனமாய் என் வீட்ல தங்க வச்சுட்டேன். ரயில் பிரயாணம் இவ்ளோ கிலோமீட்டருக்கு மேல இருந்தால் ஒரு நாள் தங்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிங்க கிட்டேயேயும் ஜர்னியை பிரேக் செய்யுறதாய் சொல்லிட்டோம். சீட் ஒதுக்குவாங்கன்னு நினைச்சால் ஒதுக்கல. ரயில்வே இலாகாவைப் பற்றி ஒங்களுக்குத் தெரியாதா. ஒரே ஊழல்."

நவாப்ஜான், காரமாயும் சாரமாயும் பதிலளித்தான்.

"இந்த நாட்ல. எந்த இலாகாவுலே ஊழல் இல்லாமல் இருக்குது. இந்த ரயில்வே இலாகாவுல இல்லாம இருக்குதுக்கு? இந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான தாலுகா அலுவலகங்களில் ஒண்ணே ஒண்ணுல யாவது லட்சக் கணக்கான போலீஸ் ஸ்டேஷன்கள் ஒண்ணுலயாவது ஊழல் இல்லன்னு சொல்ல முடியுமா..? பெரிசா ரயில்களை மட்டும் பேச வந்துட்டிங்கவே..? எங்களுக்கும் ஊழல்ல உரிமை வேண்டாம்ா. சொம்மா கடமையை மட்டும் செய்தால் எப்டி?"

'இப்போ அது பிரச்சினை இல்ல தம்பி. ஒங்களைக் கவனிச்சுக்கிறேன். இவங்களுக்கு எப்படியாவது நீங்கதான் இடம் கொடுக்கணும்."

நவாப்ஜான் ரேட்டுக்காக இழுத்தான். "இடம் இல்லியேன்னு பார்க்கேன்."

திடீரென்று ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்திருந்த சின்னப்பயல் எழுந்தான். நவாப்ஜானைப் பார்த்து அப். அப். என்று சொன்னபடியே தனது இடத்தில் அவர்களில் ஒருத்தி உட்காரலாம் என்று சைகை செய்தான். உடனே அந்த நாக்பூர் தமிழர் "பரவாயில்லே. ஒரு சீட்லயே ரெண்டு பேரும் அனுசரிச்சு உட்காருவாங்க. நாங்க பெட்டி படுக்கைய்ோடு வாறோம்" என்று சொல்லிவிட்டு மறைந்தார் - அந்தப் பெண்களுடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/25&oldid=588200" இலிருந்து மீள்விக்கப்பட்டது