பக்கம்:நிழல் முகங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 13

நவாப்ஜானுக்குப் பயங்கர கோபம் இருக்கையில் உட்காராமல் நின்ற சிறுவனை முறைத்துப் பார்த்தான். பிறகு, அவன் காதைப் பிடித்துத் திருகியபடியே கத்தினான்.

"முட்டாப் பயலே. சொம்மா இருக்க வேண்டியதுதானடா. பெரிய தர்மதுரை. பிச்சப் போடுறாரு. கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறானாம் முட்டாப் பய."

அந்தச் சிறுவன் காதுவலி தாங்காமல் நரிபோல் ஊளையிட்ட போது, அந்தப் பெண்கள் பெட்டி படுக்கையோடு வந்து, உட்கார்ந்திருந்த பயலைக் கண்களால் எழுப்பி உட்கார்ந்தார்கள். நவாப் ஜான், அப்போது ஊழல் பேசியவரை ‘ஒரம் கட்டி பேசியனுப்பினான். -

திடீரென்று ரயில் ஊளையிட்டது. மெள்ள மெள்ள நகர்ந்தது. அப்போது அந்தப் பயல் பெட்டிக்கு வெளியே வந்தான். "அப். அப்." என்று கத்தியபடியே அந்தத் தொழிலாளர்களை விட்டுவிட்டு, பெட்டி பெட்டியாகக் கடந்து ஒடி ஒடி ஒய்ந்து கொண்டிருந்தான். பயணிகள்மேல் மோதி, படுக்கைகளைக் காலால் இடறி, எதிர்ப் பட்டவர்களை மோதி, எங்கேயோ போகப் போகிறவன்போல் ஒடிக் கொண்டிருந்தான்.

பலராமன், படபடத்தான்.

"டேய் சாய்பு பையா. ஒன்னால அந்தப் பயல் ஒடிட்டான் பாரு. ரோஷக்காரப் பயல். ரயில்ல இருந்து கீழே குதிச்சுத் தற்கொலை பண்ணப் போறாண்டா. வாங்குன பணத்தை அப்புறம் எண்ணிக்கலாண்டா. வாடா. நாமும் ஒடுவோம். அவனை சாவுலே இருந்து காப்பாத்துவோம்."

દ્વષ્ટિ

அந்த ரயில், மனிதனின் நடை வேகத்தில் போனபோது, ரயில் வயல், பலரை இடித்துக்கொண்டு, ஒடும் ரயிலுக்குள்ளேயே பின் புறமாய் ஓடினான்.

வராந்தா மாதிரியான ஒடுக்கப் பாதை வழியாக ரயில் பெட்டி களுக்கு இடையே உள்ள இணைப்புப் பாலம் வழியாக, "அப். அப்." என்று சொன்னபடியே ஒடினான். என்னமோ ஏதோ என்று, ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/26&oldid=588205" இலிருந்து மீள்விக்கப்பட்டது