பக்கம்:நிழல் முகங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சு. சமுத்திரம்

சில பயணிகள், ரயில் சங்கிலியை இழுக்கப்போனார்கள். அப்படி இழுக்கப் போனவர்களை, மற்றவர்கள் இழுத்துப் பிடித்துத் தடுத்தார்கள். சிலர், அவன் எதையும் திருடி கொண்டு போகிறானோ என்பதுபோல், “திருடன், திருடன்” என்று சொன்னபடியே பின்னால் ஒடி, அப்புறம் இளைத்துப் போய் இருக்கைகளுக்குத் திரும்பினார்கள்.

எப்படியோ ஒரு பெட்டியின் வாசல் பக்கம் போய், அந்தோணியைப் பார்த்து விட்டான். கதவு, பாதி திறந்திருந்தது. அவனைப் பார்த்த பயல் "அப். அப்." என்றான். இன்னமும் பிடறிகளை கை பின்னியபடி நடந்த அந்தோணி, பயல்ை அதிசயித்துப் பார்த்தபடியே, ரயில் வேகத்தில் ஒத்து ஓடி, அவனைக் கீழே இறக்கி விடப்போனான். பயலோ, அவன் பிடியில் சிக்காமல், லாவகமாக ஒதுங்கியபடியே "அப். அப்." என்று சொன்னபடியே கையசைத்தான், விடை பெறுகிறானாம்

இதற்குள், ரயில் ஏதோ ஒரு காரணத்திற்காக நின்றது. "கட்டை வண்டிக்கு ரயிலுன்ன பேர் வச்சுட்டாங்கய்யா” என்று பக்கத்துப் பெட்டிப் பயணி ஒருத்தர் கத்தியபோது நவாப்ஜான், பலராமன், நாராயணன் உட்பட பல தொழிலாளர்கள் ஓடி வந்தார்கள். நவாப்ஜான் அந்தப் பயலைப் பார்த்து, பொய்யான கோபத்துடனும் மெய்யான வருத்தத்துடனும் அதட்டினான்.

"ஏண்டா, ஒன் காதைத் திருக எனக்கு உரிமை இல்லையா..? நூறு ரூபாய் சீட்டைக் கொடுத்திட்டியே. என்கிற ஆத்திரத்துல லேசாத்தான் காதைப் பிடிச்சேன், அது க்கா இப்படியாடா ஒடுகாலியாகிறது. ஒடுகாலிப் பயலே!"

கீழே நின்ற அந்த்ோணி, மேலே நின்ற நவாப்ஜானை அதட்டினான்.

"அப்படியேதான் இருக்கட்டும். அதுக்காக இந்த அப்பாவிப் பயலை அடிக்கலாமாடா..? வெற்றிலை மாதிரி இருக்கிற அவன் காதுல ஒன் உலக்கைக் கை பட்டால் என்னடா ஆகிறது? டேய், இந்த மாங்காய் மடையன்ககிட்ட நீ இருந்தது போதும், வாடா என்னோட. டில்லிக்கு ஜாலியாய்ப் போயிட்டு வரலாம்."

அந்தோணி இரண்டு கைகளையும் நீட்டியபோது, அந்தப் பயல் சற்று உள்ளேபோய் நின்று கொண்டான். அங்கு நின்றபடியே அவனைப் பார்த்து "அப் அப்" என்று சொன்னபடியே கையைக் காலை ஆட்டி, பல்வேறு சமிக்ஞைகளைப் பண்ணினான் அந்தோணி மீண்டும் கோபப்பட்டு "பிறகு எதுக்குடா இங்கே ஒடி வந்தே" என்று கத்தினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/27&oldid=588208" இலிருந்து மீள்விக்கப்பட்டது