பக்கம்:நிழல் முகங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 15

பலராமன், விளக்கினான்.

“ஒனக்கு மூளையே கிடையாது.டா மச்சான். நீ நடந்து போறதைப் பயல் பார்த்துட்டான். அவன் இல்லாமல், நீ வருத்தத்தோட போறதைப் புரிஞ்சுக்கிட்டான். மனசு கேட்காமல் ஒன்னைச் சமாதானப் படுத்துறதுக்காக ஒடி வந்தான்; நவாப்பு காதைத் திருகினான்னு கோபத்துல வரல. ஏண்டா ஊமப் பிசாசே, அப்படித்தானே?" -

அந்தப் பயல் ஆமாம் என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினான். உடனே காது திருகி நவாப்ஜானுக்கு மகிழ்ச்சி. அந்தோணிக்கு ஏமாற்றம். அதைப் புரிந்து கொண்ட பயல், அவனையும் தங்களோடு வரும்படிக் கையைப் பிடித்து இழுத்தான். "அப். அப்." என்று சொன்னபடியே ரயில் கதவில், ஒரு காலை ஆதாரமாக ஊன்றியபடியே இழுத்தான். அந்தோணிக்கு அந்த அன்புப் பிரவாகத்தில் அழுகையே வரும் போலிருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமலே, சமாதானப்படுத்தினான்.

"ஒன்னை மாதிரி நான் என்ன ஒசிக் கிராக்கியாடா..? இஷ்டப் பட்ட ரயிலில் ஏறி இஷ்டத்துக்குச் சுத்துறதுக்கு முடியாது.டா. இது பொழப்புடா..."

அந்தப் பயல், அந்தோணி சொல்வதைப் புரிந்து கொண்டவன் போல், அவனை இழுப்பதை விட்டுவிட்டு, அவனையே பார்த்த படியே நின்றான். உடனே அந்தோணி, இரண்டு ரூபாய் நோட்டை அவன் வேட்டியில் மடித்து அதை இடுப்பில் சொருகிவிட்டுச் சொன்னான்.

"ஏண்டா கண் கலங்குறே? அடுத்தவாரம் டில்லிக்குப் போகிற ரயிலு இந்த நாக்பூருக்கு திரும்பத்தானே போகுது. நீ அப்போ என்னோடு வரத்தானே போறே. டேய் நவாபு. இன்னொரு வாட்டி என் மகனோட காதைப் பிடிச்சே அப்புறம் பிடிக்கிறதுக்கு உனக்குக் கை இருக்காது. சாக்கிரதை."

ரயிலும், சாக்கிரதையாகப் புறப்பட்டு சரிகமபதநில தாள லயத்தோடு நகர்ந்து, பின்னர் ராட்சத ஒட்டம் எடுக்கத் துவங்கியது. பலராமனும், நவாப் ஜானும், பயலைப் பிடித்தபடியே திரும்பி நடந்தார்கள். பயலோ அவர்களிடமிருந்து திமிறி விடுபட்டு, மீண்டும் ரயில் கதவுக்கருகே ஒடி வந்து, அந்தோணியைப் பார்த்து, "அப். அப்." என்று ஒலிச் சிதறல்களை உணர்ச்சிமயமாய், ஒருமுனைப்படுத்திக் கூவியபோது, ரயில் அந்தோணியையும் அவனையும் பிரித்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/28&oldid=588211" இலிருந்து மீள்விக்கப்பட்டது