பக்கம்:நிழல் முகங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சு. சமுத்திரம்

"என்ன ராமனோ, விட்டுத் தள்ளு. இந்தப் பயலைப் பாருடா. எப்படி ரெண்டு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுறான் பாரு காசு கொடுப்பானாம். டீ கொடுக்கணுமாம். அடப் பாருடா அந்தப் பயலை ஒனக்கும் சாப்புக்கும் நார்னனுக்கும் கொடுக்கணுமாம். பணம் கொடுக்கேன் என்கறது மாதிரி சைகை செய்கிறான் பாரு. அடி செருப்பால, குதிரைக்கு ஏன் கொம்பு கொடுக்கல என்கிறதுக்கு அர்த்தம் இப்பத்தான் புரியுது."

தேநீர்க்காரன், அந்தப் பயலுக்குத் தேநீர் கொடுக்காமலே, போக்குக் காட்டினான். பிறகு ஒரு பிளாஸ்டிக் தம்ளரில் நிறையவே ஊற்றி அவனிடம் கொடுத்தான். அவன் நீட்டிய இரண்டு ரூபாய் நோட்டை வாங்க மறுத்து, அவன் காதைத் திருகப்போனான், பயல் தலையை ஜன்னலுக்குவெளியே நீட்டினான். உடனே "முண்டமாய்ப் போயிடுவேடா முண்டம்" என்று கத்தினான்.

அரும்பு மீசை இளைஞன், ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, அந்தப் பயலிடம் நீட்டினான். தொலைக்காட்சி காமிராவுக்கு, அரசியல்வாதிகள் போஸ் கொடுப்பது போல், அவன் முகத்தைக் கோணலாக்கியபடியே நீட்டினான். பயல் மறுத்தான். "துரைக்கு வாயில ஈரம் படப்படாதாம்" என்று விளக்கமளித்தான் நவாப்ஜான். பயல் மறுக்க பழத்தை வாலிபன் எதிரே தோன்றிய இளம் பெண்களுக்குக் காட்ட, அவர்கள் மறுக்க, இறுதியில் அவன் அந்த மார்வாடி மனிதரிடம் நீட்ட, அவரோ, அதை அவன் ஈடு வைக்கிறானோ என்பதுபோல் பழத்தை உருட்டி உருட்டிப் ப்ார்த்தார்.

இந்தப் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் ஒரே கும்மாளம். "அங்கமுத்து. தங்கமுத்து." என்று ஒருவன் பாட பலர் அதற்குக் கைத்தட்டால் தாளம் போட்டார்கள். அவர்கள் தமிழ் மாணவர்களாம். நாக்புரியில் உள்ள பொறியில் கல்லூரியில் படிப்பவர்களாம். விடுமுறையில் வீடுகளுக்குப் போகிறார்கள். ஆங்காங்கே அவர்கள் பாடல் விரசமாக இருந்தது. அந்தப் பெண்கள் முகம் சுழித்தார்கள். பிறகு, காதுகளை, கைகளால் மூடிக் கொண்டார்கள். உடனே ரயில் பயல், பலராமன் கைகளைப் பிராண்டி, பாட்டுப் பாடும் பெட்டிக்குள், ஏதாவது தர்மம் செய்யும் படி, அவனை தன் பிஞ்சுக் கரங்களால் தள்ளினான். நவாப்ஜான் அங்கிருந்தபடியே குரல் கொடுத்தான்.

"ஏண்டா. புறம்போக்குகளா. புல்லுருவிகளா. ஒங்கப்பா, ஒங்கம்மா வாயைக் கட்டி, வவுத்தக் கட்டிப் படிக்க வைக்கிறதை நெனச்சுப் பாருங்கடா. தமிழன்னா உசத்தின்னு ஒரு காலத்துல இருந்த பேரைக் கெடுக்கிறதுக்கே பிறந்த பசங்களா. இந்த ரயிலுல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/31&oldid=588219" இலிருந்து மீள்விக்கப்பட்டது