பக்கம்:நிழல் முகங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - சு. சமுத்திரம்

"இவனோட கதை தனிக்கதை. பெரிய எழுத்தாளரால கூட எழுத முடியாத கதை, சொல்றேன். ஆனால், இந்தக் கதையைக் கேட்கிறதுக்கு உங்களுக்குக் க்ருணை இருக்கணும். மனிதாபிமானம். வேணும். இருக்குமென்கிற அனுமானத்துல சொல்றேன்."

தடா தடா என்று காட்டுத்தனமாகப் பாய்ந்த ரயில், இப்போது வேகமடக்கி, வீறாப்பைக் குறைத்துத் தொட்டிலாடுவது போல் ஆடியது. ஒடியது. அப்போது அந்தப் பையனுக்கு அம்மா ஆட்டிய தொட்டில் நினைவுக்கு வந்ததோ என்னமோ. தனக்குள்ளே தன்னையோ அல்லது தாயையோ பார்ப்பதுபோல், ஆடாமல் அசையாது இருந்தான். அவன், அப்போது ஒரு மாதிரியாகப் பார்த்தான். இயலாமையால் எழுந்த ஏமாற்றப் பார்வை. எதையோ குறிவைத்து ஏமாந்து போனது போல் விடை காணா விகற்பப் பார்வை. பார்வை இழந்தவனைப் போன்ற பாராமுகப் பார்வை.

அரும்புமீசை வாலிபன், தூண்டினான்.

"சரி. சொல்லுங்க"

பலராமன், பயலைத் தோளில் சாய்த்தபடியே சொன்னான்.

"இந்தப் பையன் எங்களுக்கும் இந்த ரயிலில் சீனியர். நான் வேலைக்குச் சேர்ந்து மூணு வருடந்தான் ஆகுது. ஆனால் இவன் இந்த ரயில்ல எட்டு வருஷமாய் இருக்கான். ஆறுவயசுப் பையனாய் சென்ட்ரல் ரயில் நிலையத்துல கையைக் சூப்பிக்கிட்டுப் படுத்துக் கிடந்தானாம். அப்புறம் சாயங்காலமாய் அங்குமிங்குமாய் அழுது திரிஞ்சானாம். அப்போ பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர், மணி. அவரு ஒரு அற்புதமான மனிதர் - இப்பவும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துல எந்தப் பிரச்சினைன்னு வந்தாலும் அவரைத்தான் கேட்பார்கள். இதுவரைக்கும் ஏழு அனாதைக் குழந்தைகளைக் கண்டுபிடிச்சு வசதியானவர்கள் கிட்ட வளர்ப்புப் பிள்ளையாய் ஒப்படைச்சிருக்கார். ஒரு தடவை பஞ்சலோக சிலைகளைக் கோணி மூட்டைகளில் கட்டிப் போட்டு எடுத்துட்டுப் போனவனையும் கையும் களவுமாய் கண்டுபிடித்தவர். தங்கமான மனிதர்."

வாலிபன் குறுக்கிட்டான். "சரி பையனுக்கு வாங்க" "ஒங்க பேரு என்னங்க?"

"சீனிவாசன்"

"இதோ பாருங்க சீனி. ஒரு நல்ல மனிதனைப் பத்திப் பேசும்போது காது கொடுத்துக் கேட் கணும். மனிதாபிமானம் செத்துப் போயிட்டு இருக்கிற காலத்துல ஏழு அனாதைக் குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/33&oldid=588224" இலிருந்து மீள்விக்கப்பட்டது