பக்கம்:நிழல் முகங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சு. சமுத்திரம்

சிறிது நேரம் அமைதி. எதையுமே பொருட்படுத்தாதது போல் கைகால்களை மடக்கிப் போட்ட அந்த வயதான தெலுங்கம்மா முதல் தடவையாகப் பேசினாள்.

"தரவாத ஈ அப்பாய் கத செப்பண்டி" (இந்தப் பையனோட கதையைச் சொல்லுங்க)

பலராமன் பதிலளித்தான். கைகளைச் சொடுக்கிடுவது வரைக்கும் திறந்து வைத்திருந்த வாயைப் பேசவிடாமல் செய்து விட்டு, இப்போது பேசினான்.

“எனக்குன்னு ஒரு பழக்கம் இருக்கும்மா. ஒரு விஷயத்தைச் சொல்லிட்டு இடையிலேயே விட்டுடுவேன். அப்புறம் யாராவது கேட்டால்தான் பதிலைச் சொல்லுவேன். நான் சொல்றதை யாரும் வேண்டா, வெறுப்பாய்க் கேட்கிறது எனக்குப் பிடிக்காது."

"நல்லவேளை. நீங்களாவது கேட்டிங்களே. இந்தப் பயல் ஆறுவயசு குழந்தையாம். அலைஞ்சு பிளாட்பாரம் இன்ஸ்பெக்டர் மணி.”

"மரியாதையோட சொல்லுடா. நீயெல்லாம் தமிழனா?”

"டேய், இடையிலே வராதடா மணி அய்யா. இந்தப் பயலுக்குப் பால் வாங்கிக் கொடுத்திருக்கார், ஒலி பெருக்கிலயும் அறிவிச்சு இருக்கார் ரேடியோவுல சொல்லியிருக்கார். ஒருத்தியும் வரலை. அப்புறம் ஒருவாரம் தன்னோட வச்சிருக்கார். அப்போதான் சமையல்காரர் ஆண்டியப்பன், இந்தப் பயலை மணி ஸார் கிட்டே இருந்து வாங்கி தன்னோட வச்சுட்டார். இவர் சொந்தப் பிள்ளை மாதிரி ரெண்டு வருஷம் வளர்த்திருக்கார். ரயில்ல போகும்போதும் வரும்போதும் கூட்டி வந்திருக்கார். திடீர்னு அவர் இறந்துட்டார்." மார்வாடி மனிதரும் இப்போது முதல் தடவையாகப் பேசினார். "அதுக்குத்தான் குழந்தைகளை தத்து எடுக்கவும் ராசி பார்த்து எடுக்கணும் என்கிறது."

"என்ன பேச்சு ஸார் பேசுரே.? செத்த பேச்சு."

"சரி. மேலே போங்க."

"வளர்ப்புத் தந்தை ஆண்டியப்பன் செத்துப் போனதும், இந்த ரயிலுலயும் அப்புறம் தமிழ்நாடு ரயிலுலயும் வேலை செய்யுற தொழிலாளிகளும் சமையல்காரங்களும் சர்வர்களும். பயலுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் ஆயிட்டாங்க பயல் இவங்களையெல்லாம் "அப். அப்." அதாவது அப்பான்னு தான் கூப்பிடுவான். அப்புக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/35&oldid=588229" இலிருந்து மீள்விக்கப்பட்டது