பக்கம்:நிழல் முகங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 25

நவாப்ஜான், "டேய். டேய்." என்றான். உடனே அந்தச் சிறுவன் ஒரு கையால், அவன் கழுத்தையும் சுற்றி வளைத்துக் கொண்டு அப். அப்...' என்று சொல்லியபடியே அழுதான். அழுதபடியே முணுமுணுத்தான். அதைப் பார்த்து பலராமனும் அழுதுவிட்டான். அவன் கண்ணிர், அந்தச் சிறுவனின் முதுகு வழியாகக் கீழே ஒடியது. நவாப்ஜான் சுயத்தை இழக்காமல் ஆடிப்போனாலும், அதை அடக்கியபடியே சுதாரித்துக் கொண்டான்.

"ஏன் ஸார், ஒனக்கு மூளை இருக்குதா? அவன் எதை மறக்க நினைக்கானோ அதை ஞாபகப்படுத்துனால் என்ன ஸார் அர்த்தம்? அவன் அம்மா எப்படி இருந்தால் ஒனக்கென்னய்யா. டேய், கயிதே! அழாதடா கயிதே. நாங்க இருக்கோண்டா, ஒங்கம்மாவை நெனக்காதடா. இதோ பார் எனக்கு ஒரே அம்மா. உருப் பிடியில்லாத அப்பா. பலராமனுக்கும் ஒரே அப்பா, பணத்தால் பாசத்தை அழிக்கிற வேசக்கார அப்பா. ஆனால் ஒனக்கு எத்தனை எத்தன அப்பாங்க! நாலு அப்பா. நாராயணன் அப்பா, அந்தோணி அப்பள். இந்த பலராம் கயிதேயும் அப்பா, அடேயப்பா எத்தனை அப்பா ஏண்டா. எங்களைவிட ஒங்கம்மா. ஒனக்கு ஒசத்தியா? இதுக்குமேல் அழுதால் ஒங்கம்மா உசத்தி, நாங்க தாழ்த்தின்னு அர்த்தம்."

அந்தப் பயல், எப்படி திடீரென்று அழுதானோ, அந்த வேகத்தில் அழுவதை நிறுத்திக் கொண்டான். பலராமனின் மார்பில் முகமெடுத்தான். நவாப்ஜானைப் பார்த்தான். நீங்கதான் உசத்தி என்பதுபோல் அண்ணாந்து பார்த்தான். அவன் கையைப் பிடித்தபடியே பார்த்தான். பிறகு பலராமன் கையையும், பிடித்துக் கொண்டான். அப்போது சீனிவாசன் "நான் எதுக்குக் கேட்டேன்னால்" என்று இழுத்தபோது நவாப்ஜான் "கொஞ்ச நேரம் வாயை மூடிக்கினு இருய்யா ஸாரே என்று அதட்டினான்.

அந்தப் பெட்டியில் இருந்த அனைவரும் அந்தப் பையனைப் பற்றி தத்தம் தரத்திற்கேற்ற வகையில், இப்படி தொடர்ந்து சிந்திப்பது அவர்களுக்கு பழக்கமில்லாததால், அந்தச் சிந்தனையே அவர்களுக்கு மூளைச் சுமையாக, லேசாக துங்கிப் போனார்கள்.

ஆனால், அந்த பயலால் துரங்க முடியவில்லை. வெளியே வந்தான். அந்தப் பெட்டியின் பின்பகுதியில் வாசல் ஒரத்தில், ஒருத்தி அங்கும் இங்குமாக அலைமோதி நடந்தபடியே, அவனை பீதியோடு பார்த்தாள் ஏற்கெனவே திறந்து வைத்த ரயில் கதவின் வழியாக அவள் குதிக்கப்போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/38&oldid=588238" இலிருந்து மீள்விக்கப்பட்டது