பக்கம்:நிழல் முகங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 31

ஆயிற்று. அரைமணி நேரம் ஆயிற்று.

பலராமனும் நவாப்ஜானும் மீண்டும் அவளிடம் எதையோ கேட்கப்போனார்கள். பலராமனைக் கேட்கும்படி நவாப்ஜானும், நவாப்ஜானைக் கேட்கும்படி பலராமனும் தூண்டிவிட்டார்கள். இதைப் புரிந்து கொண்டவள்போல் அந்தப் பெண் சோகமாய்ச் சிரித்தாள். பலராமன் பையப் பைய. கேட்டான்

"நாங்க யாரைப் பற்றியும் கேட்கமாட்டோம். ஆனா உங்க விஷயத்துல கொலை பேச்சு விவகாரம் அடிபடுது பாருங்க. நீங்க சொல்ல வேண்டியத மட்டும் சொன்னாப் போதும். உங்க ஊரு எதும்மா?"

இப்போது அந்தப் பெண் முகத்தில் லேசான தெளிவு. ஓரளவு நம்பிக்கை பெற்றவள்போல் தலையை லேசாய் ஆட்டியபடியே சொன்னாள்:

"நான் வெளிநாட்டுக்காரி. மலேசியாக் காளி..."

"நீ எங்க இருந்தாலும் தமிழச்சிதான்; இத மறந்துவிடக் கூடாதம்மா”

"உண்மைதான், ஆனா மறக்க வைச்சுட்டாங்க. நான் மலேசியாவில இருக்கும்போது யாரும் எனக்கு எந்த ஊருன்னு கேட்டால் தமிழ்நாடுன்னு சொன்னவள்நான். இவ்வளவுக்கும் நான் பிறந்தது மலேசியாவில். எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மூதாதையர்களும் பிறந்தபூமி என்கிற வகையில் தமிழ்நாட்டு மேலே ஒரு தனிப்பிடிப்பு இருந்தது. மலேசியா, பர்மா, இலங்கை, மொரிசீயஸ் நாடுகள்ல தமிழ்க்குலம் பலவிதமாய் இருந்தாலும் அதனோட வேர் இந்த தமிழ்நாடு என்கிறதுல ஏற்பட்ட பாசம். ஆனா தமிழ்நாட்டுக்கு வந்த இந்த ஏழெட்டு வருஷத்துல இப்ப யாராவது என் ஊரைக் கேட்டா மலேசியான்னு சொல்றேன். அப்படிப் பேசும்படியா ஆக்கிட்டாங்க. ஆனா நான் பட்டயாடும் படுத்தப்பட்ட பாடும் உங்களை சந்திச்ச இந்த அரைமணி நேர்த்துல மனசுல இருந்து போயிடுத்து. தமிழ்க்குலம் இன்னும் சாகல என்கிறத நிரூபிச்சிட்டீங்க.."

எல்லோரும், அவளை அண்ணாந்து பார்த்தார்கள். ஏதோ. கொலை வெறியர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்ட ஒரு சாதாரண அல்லது மோசமான பெண் என்ற அனுமானத்தில் அவளைப் பார்த்த அந்த இரண்டு பெண்களும் கூட நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். அவளின் சோகக் கதையின் சுவையைப் பகிர்ந்து கொள்வதை விட அவளின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ள விரும்பியவர்கள் போக்ய தொழிலாளர்கள் அவளைப் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/44&oldid=588257" இலிருந்து மீள்விக்கப்பட்டது