பக்கம்:நிழல் முகங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 க. கழுத்திரம்

கரங்களை வைத்துக் கொண்டான். ஏதோ பேசப்போன தோழியை காஞ்சனா கண்களை உருட்டி அடக்கினாள். அந்த ரயில் பயல், அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்தான். அவள் எல்லோரையும் பொதுப்படையாகப் பார்த்து விட்டுப் பேசத் துவங்கினாள்.

"என் பெயர். நாடோ வீடோ. இல்லாதவளுக்கு. பெயர் எதுக்கு. வீடோ நாடோ இல்லாதவளுக்கு பெயர் ஒரு கேடா. சரி சொல்றேன். தமிழ்நாடு ஞாபகமாய் எனக்கு தமிழ்ச் செல்வின்னு பெயர் வைத்தார் என் தாத்தா. அவரும் இப்படித்த்ான் கங்காணி மூலமாக கப்பலில் தள்ளப்பட்டு கலீங் என்ற இடத்தில் இடறி விழுந்திருக்கார். ஆனாலும் என் தாத்தா தன்னோட தங்கைகளைக் கல்யாணக்கரையில் ஏற்றுவதற்குத்தான் கடல் கப்பலுக்குள் ஏறியிருக்கார் கெட்டு நொறுங்கின குடும்பமாம் தாத்தா குடும்பம் அவங்க அப்பா. சொத்து பத்து எல்லாவற்றையும் கள்ளாயும், பெண்களாயும் மாற்றி கடன்பட்டுட்டாராம். அதுவரைக்கும் அரங்கு வீட்டுக்குள்ளேயே இருந்த என் தாத்தாவின் தங்கைகளுக்கு கூலி வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. இதை மூத்த சசோதரரான வேல்மயிலால் தாங்க முடியவில்லை. தங்கைகளுக்கு வாழ்வளிப்பதற்காகத் தன்னோட வாழ்க்கையை அர்ப்பணித்து இனம் தெரியா நாட்டில் முகமறியா மக்களோடு வாழப் போனார். கலீங் என்ற இடத்தில் ரப்பர் தோட்டத்தில் கூலியாளாய் சேர்ந்திருக்கிறார்."

"அவரும் அவரைப் போன்ற இதர தமிழர்களும் குற்றேவல்காரர்களாய் வேலை பார்த்த இந்த இடத்திற்கு கலிங்' என்று எப்படிப் பேர் வந்தது தெரியுமா? தமிழ்ப் பெண்கள், கால்களில் தண்டைகளோடு நடக்கும்போது கலிங் கலீங் என்று சத்தம் வந்திருக்கு. அந்த சத்தத்தை வைத்தே அவர்கள் நடமாடிய அந்த இடத்துக்கு கலீங் என்று பெயர் வைத்திருக்காங்க.."

ஏதோ குறுக்கே பேசப்போன பலராமனை, நவாப்ஜான், தலையில் ஒரு போடு போட்டான். அவள், லேசாய் சிரித்தபடியே தொடர்ந்தாள்.

"சரி. ஊர்க் கதையில் உங்களுக்கு இஷ்டம் இருக்காது. என் கதைக்கு வர்றேன். ரப்பர்த் தோட்டத்தில் வேல்மயில் அல்லும் பகலுமாய் வேலை பார்த்தார். சில கங்காணிப் பயல்கள் அழகான தமிழ்ப் பெண்களை அடர்ந்த காட்டுக்குள்ளே வேலை செய்யச் சொல்லியிருக்காங்க. இது உங்களுக்கு ஏன்னு புரியுமுன்னு நினைக்கேன். இதைத் தாத்தா எதிர்த்திருக்கிறார். அவர்களுக்குப் பலியாகப்போன அப்பாவித் தமிழ்ப் பெண்களை வேல்மயில் காப்பாற்றி இருக்கிறார். இதனாலேயே பல கஷ்டங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/47&oldid=588267" இலிருந்து மீள்விக்கப்பட்டது