பக்கம்:நிழல் முகங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சு. சமுத்திரம்

இதுநாள் வரைக்கும் சைக்கிள்காரன் குடும்பமுன்னு பேர். தாத்தா இதோட விடல. தன்னோட ஒரு மகனுக்கு... அதுதான் எங்கப்பாவுக்கு, எங்க பாட்டியோட அண்ணன் மகளைக் கல்யாணம் செய்து வைத்தார். எங்கப்பா, தயங்குனப்போ, 'எப்போதாவது நாம ஊர்ல போய்த்தாண்டா வாழப்போறாம். அந்நிய பூமியில சிங்கத்துக்கு வால்ாய் இருக்கிறதைவிட சொந்த ஊர்ல நாய்க்குத் தலையாய் இருக்கிறது எவ்வளவோ மேலடான்னு சொல்லியிருக்கார். அதோட, நீ கட்டிக்கப் போறவள் யாரு? ஒன்னோட அத்தை மகள்தானே என்று அறிவுறுத்தி இருக்கார். ஆக மூன்றாவது தலைமுறையிலும் ஊருக்கும் எங்களுக்கும் பந்தம் ஏற்பட்டது. எங்கப்பா கோலாலம்பூரில் ஜவுளிக்கடை வைத்தார். என் பேர்ல - தமிழ்ச்செல்வி சில்க் பேலஸ். என்று பெயர் வைத்தார்.”

"எங்கப்பா எப்படி மலேய வாழ்க்கையில் ஒன்றிட்டாரோ அப்படி எங்கம்மா மலேயாவில் இருந்தபடியே, தான் பிறந்த குட்டாம்பட்டியிலேயே மானசீகமாக வாழ்ந்தார். அவ்ரால் எழுதப் படும் கடிதங்கள் அன்னியச் சுமையோடு போகும். மாமாக்களிடம் இருந்து வரும் கடிதங்கள் மண்வாசன்ையுடன் வரும். தாத்தாவும் அம்மாவும் ஊருக்குத் தனித்தனியாய்க் கடிதம் எழுதுவார்கள். ஒரே கடிதத்தில் எழுதுங்களேன் என்று அப்பா சொன்னால் கேட்க மாட்டார்கள். எழுதுறதுக்கு அவ்வளவு விஷயமாம். தாத்தா குற்றாலம் ஏரி குளம் பெருகிட்டா..? என்று கேட்டு எழுதுவார். அம்மா, உலவுப்பாட்டி பேத்தி வயதுக்கு வந்துட்டாளா..? என்று விசாரிப்பாள். 'முடிதீர்த்தான் குளத்தில் "பள்ள மாடன்” குடும்பத்து ஆறுமுகம் வயலை வாங்கிப் போடலாமே...? என்று தாத்தா கேட்டதும், "அப்படித்தான். நினைக்கோம், உடனே பணம் அனுப்புங்கள்" என்று பதில் கடிதம் வரும்."

"நான் பிறந்து மூன்று ஆண்டுகளில் பாட்டி இறந்து விட்டாள். எப்போ நான் பிறந்தேனோ, அப்பவே எங்கம்மா, 'இவள் எங்க பெரியண்ணா மகன் தாமரைப்பாண்டிக்குன்னு சொல்லிட்டாளாம். என்னோட எல்லாப் பெண் குழந்தைகளும் எங்க அண்ணாச்சிகள் பயல்களுக்கு அவங்க பெத்துப் போடுற பொட்டைக் கழுதைகள் என்னோட பசங்களுக்குன்னு அந்தப் பசங்களைப் பெத்துப் போடுறதுக்கு முன்னாலயே அம்மா சொல்வாங்களாம். இதனால் தானோ என்னமோ அல்லது நான் ஒருத்தி படப்போகிற பாட்டை நினைத்தோ அம்மா அடுத்த குழந்தை பெறல. அண்ணன்கள் வீட்டில சம்பந்தம் எடுக்கணும் என்கிறதுக்காகவே டாக்டர்களைக் கூடப் பார்த்தாள்ாம். நான் சிசேரியன் ஆப்பரேஷனில் பிறந்ததால அம்மாவலே அப்புறம் முடியலன்னும் முடியக்கூடாதுன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/49&oldid=588271" இலிருந்து மீள்விக்கப்பட்டது