பக்கம்:நிழல் முகங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 37

டாக்டர்கள் சொல்லி விட்டதாய் அப்பாம்மா பேச்சுவாக்கில் கேள்விப்பட்டேன்."

"தாத்தாவோட தூண்டுதல்ல அம்மாவோட நச்சரிப்புல அப்பா ஊருக்குப் பணம் அனுப்பி நிலம் வாங்கிப்போட்டார். அந்தக் காலத்துலயே மாதாமாதம் ஆயிரம்ருபாய் வரைக்கும் அனுப்பினார். முடிதீர்த்தான்குளத்தில் சுடலைமாடரோட ஒரு கிணத்துப் பாசம். வந்ததில் தாத்தாவுக்கும் சந்தோஷம். தாத்தா பெயரில்தான் வாங்கிப் போட்டதாகக் கடிதம். இதேபோல் சந்திரப்பேட்டை என்ற இடத்தில் தாத்தா பேருக்கு நிலம். அப்புறம் நில உச்சவரம்புச் சட்டத்திற்கு டிமிக்கி கொடுப்பதற்காக அப்பா பேர்ல ஒரு ஏக்கர் நிலம் பதிவாச்சு. பக்கத்தில இருந்த கோணச்சத்திரம் டவுன்ல நாற்பதாயிரம் ரூபாய்ல பழைய வீடு வாங்கி முப்பதாயிரம் ரூபாய் செலவுல புதுப்பிச்சாங்க. வீட்டு வாசலிலேயே வேல்மயில் குடியிருப்பு என்று போர்ட் மாட்டியிருந்தது. அதுக்குப் பின்பக்கம் ஒரு மாந்தோப்பையும் வாங்கியாச்சு. ஆக அப்பாவுக்கே இப்போ ஊரில ஒரு பிடிப்பு வந்துட்டு."

"எங்கம்மா சொல்லுக்குச் சொல் எங்க அத்தமகன் தாமரைப் பாண்டியனைப் பற்றியே பேசுவாள். இதனால் அம்மா மேல் எனக்குக் கோபம் வரும்போது, அவன் மேல கோபம் வரும். அம்மா மேல் அன்பு வரும்போது அவன் கிட்டயும் பாசம் வரும். எங்க குடும்பம் நாலு தடவை ஊருக்குப் போயிருக்கோம். எனக்கு ஒன்பதாவது வயது வந்தப்போ ஊரில், அம்மா சொன்ன தாமரைப் பாண்டியனைப் பார்த்தேன். அந்தச் சின்ன வயதுல அவன் என் கையைத் தற்செயலாய்ப் பிடிச்சப்போ சொந்தக்காரர்கள் கிண்டலும் கேலியுமாய்க் குலவையிட்டார்கள். எனக்கு அப்போ வெட்கப்பட்டது இப்போகூட நினைவுக்கு வருது. காதலாய் இல்ல அவமானமாய். போகட்டும்."

"ஒன்பது வயசுக்கு அப்புறம் பதினாறு வயசுல பழையபடியும் ஊருக்குப் போனோம். அதுக்கு இடையிலே அம்மா ரெண்டு தடவை போயிட்டு வந்துட்டாங்க. நான் ரெண்டாவது தடவையாய் ஊருக்குப்போனப்போ கேம்பிரிட்ஜ் படிக்கேன். தாமரைப்பாண்டி இப்போ எப்படித்தான் இருக்கான்னு பார்க்க ஒரு ஆசை. தாத்தா, அம்மா, நானுமாய் ஊருக்குப் போறோம். தாமரைப்பாண்டி நல்லாத்தான் இருந்தான். என்னைப் பார்த்து நல்லாத்தான் சிரிச்சான். அப்பா கொடுத்தனுப்புன ஃபாரின் துணியை அம்மா கொடுக்கப்போனாள். நான் வெட்கத்தையும் விட்டு, அவசரப்பட்டு அவன்கிட்டே நீட்டினேன். அப்புறம் ஒருவாரம் கழித்து அந்தத் துணியில் தைத்த பேண்ட் சட்டையிலேயே அவனை அழகு பார்த்தேன்."

. بها. وه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/50&oldid=588274" இலிருந்து மீள்விக்கப்பட்டது