பக்கம்:நிழல் முகங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& சு. சமுத்திரம்

“எனக்கு மூன்று மாமாக்கள். இவன் மூத்த மாமா மகன். ரெண்டாவது மாமா மகன் ரத்தினவேல் என்னைவிட ஒரு வயசு அதிகம். அவனுக்கு என்மேல் ஒரு கண். நான், தாமரைப் பாண்டி கிட்டே சிரிச்சுப் பேசும் போதெல்லாம் அவன் கைகளை நெறித்துக் கொள்வான். தாமரைப்பாண்டியை வம்புச் சண்டைக்கு இழுப்பான். அவன், அப்பாகிட்டே வாங்குன திட்டுக்களையும் காலேஜ்ல வாத்தியார்கிட்டே வாங்குன அடிகளையும் நினைவுபடுத்துவான். எனக்கு தர்மசங்கடமாய் இருக்கும்.”

"நான் மலேயாவுல பிறந்த தமிழ்ப் பெண் என்பதாலோ என்னவோ நேரிடையாய்ப் பேசிப் பழக்கப்பட்டவள். ஒருநாள் ரத்தினவேலை தோட்டத்தில் தனியாய்ச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அவன்கிட்டே "ரத்து. நான் தாமரைப் பாண்டியனை எவ்வளவு விரும்புகிறோனோ அந்த அளவுக்கு நான் ஒன்னை விரும்புறேன். ஆனால் அது "குடித்தனப் பாசம். ஒன்மேல வச்சுருக்கது மாமா மகன் என்ற பாசம் என்று சொன்னேன். அவன் புரிந்து கொண்டான். இந்தச் சமயத்தில் தாமரைப் பாண்டியன் எங்கிருந்தோ வந்தான். ரத்னவேல், முன்பு, எப்படி வம்புச் சண்டை இழுப்பானோ அப்படி தாமரைப்பாண்டி, இழுக்கப்போனான். அவன் பத்தாவது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நிற்பதையும் தான் காலேஜில் படிப்பதையும் அவனுக்குச் சொல்வதுபோல் எனக்குச் சொன்னான். நான் விவகாரத்தைப் புரிந்து கொண்டேன். உடனே ரத்தினவேலின் முன்னிலையில், தாமரைப்பாண்டியன் தோளில் கைபோட்டபடியே, "என்ன தாமரை. என் கொழுந்தானை அதான் என் மைத்துனனை குட்டாம்பட்டி வழக்கப்படியே நானும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தி என் கொழுந்தனை இப்படி மிரட்டுறியே. நாளைக்கு அத்தை மகள் வீட்ல சாப்பிடலாமுன்னு வந்தால் நீ என்னைத் தடுப்பே போலுக்கே..?" என்று செல்லமாகக் கத்தினேன். சூதுவாதில்லாமல் இருவர் கரங்களையும் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பக்கம் போனேன்."

ரயிலுக்குள் பேசிக்கொண்டே போனவள், திடீரென்று பேச்சை நிறுத்தினாள். அவன் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதாகவும், அது த னிய ட் டு ம் என்பது போல வும் எல்லோரும் அவளை ஒரஞ்சாரமாய்ப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். அவள் எல்லோருடைய கண்களையும் எதிர்ப்பட்டு எடை போட்டன. பிறகு, எடுத்த எடுப்பிலேயே வேகமாகவும் அதே சமயம் நிதானமாகவும் கேட்டாள்.

"என்னடா இது, ஒரு வயசுப் பொண்ணு. ரகசியமாய் வைக்க வேண்டிய விவகாரத்தை இப்படி வெட்கம் இல்லாமல் பட்டுன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/51&oldid=588277" இலிருந்து மீள்விக்கப்பட்டது