பக்கம்:நிழல் முகங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(SX

سمصے

அவள் சொல்லப்போவதைத் தெரிந்து வைத்திருப்பது போல், ரயிலும் இப்போது குகைப் பாதைக்குள் நுழைந்தது.

எங்கும் இருள்மயம். ஏதோ ஒருவித பயப்பீதி, அனைத்தும் ஆடி அடங்கி, அந்த குகையும் ரயிலும் மட்டுமே மிஞ்சியிருப்பது போன்ற அந்தகாரம். ஆனாலும், அவள் தன் கதையைத் தொடர்ந்தாள். முன்பு, பயண நண்பர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்பவள்போல், லேசாய்க் கண்களை மூடி, முகத்தை ஒருச்சாய்த்து வைத்தபடி பேசிக் கொண்டே போனாள்.

"ஊரில் இருந்து திரும்பிய ஒரு வார காலம்வரை அம்மா அழுதுகொண்டே இருந்தாள். தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்து "அம்மா” என்று கத்துவாள். ஒரு சமயம், "அப்பா” என்று அலறுவாள். பிரிதொரு சமயம் "அண்ணாச்சி" என்பாள். ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு அண்ணாச்சியைப் பெயர் சொல்லியபடியே எழுவாள். பிறகு சூன்யமாகப் பார்ப்பாள். "இனிமேல் இந்த நாட்ல இருக்கப்படாது. நம்ம சாதி சனங்களோடு போயிடலாம்" என்பாள். உடனே "இதுக்குத்தான் ஒன்னை ஊர்ப்பக்கமே அனுப்பப்படாது என்கிறது என்று அப்பர் கண்டிப்பார். அதைக் கேட்ட அம்மா, "அப்படியா! பார்த்துடலாம். அனுப்ப மாட்டிங்களா. அனுப்பவே ம்ாட்டிங்களா?" என்று மூன்று வருடங்களுக்குப் பிறகு போக வேண்டிய பயணத்துக்கு அப்பவே உறுதிப்படுத்த முயற்சிப்பாள். அந்த பரிதாபம் தாங்கமுடியாமல் அப்பாவும் அம்மாவின் முதுகைத் தட்டிக்கொடுப்பார். தாத்தாவும் இப்படித்தான் தனியாக மருகிக் கொண்டிருப்பார். நான் அவர் பக்கம் போகும் போதெல்லாம், "பேசாமல் இந்தத் தடவை போனபோது நான் ஊர்லயே ஒதுங்கி இருக்கணும்" என்பார். உடனே நான், இக்கரைக்கு அக்கரை பச்சை. என்னைப் பார்க்காமல் உங்களால இருக்க முடியுமா? என்று சவால் குரலில் கேட்பேன். உடனே அவர் என் தலையைக் கோதிவிட்ட படியே "அதுக்கும் ஒரு வழி கண்டு பிடித்திருக்கேன். ஒனக்கும் தாமரைப்பாண்டிக்கும் கல்யாணம் ஆனதும், நானும் உன்னோட ஒன்றாய் ஊர்லயே இருந்துக்குவேன்" என்று கண்களைச் சிமிட்டி கேட்க, வெட்கிப் போகும் எனக்கும்."

"எனக்கும் ஊரின் நினைவு வரும்போதெல்லாம், என்னை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்த விவசாயப் பெண்கள். இமிடேஷன் செய்யப்பார்க்கும் மாணவிகள். கண்களால் கலாட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/53&oldid=588280" இலிருந்து மீள்விக்கப்பட்டது