பக்கம்:நிழல் முகங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 41

செய்யும் இளைஞர்கள். ஆகியோர் நினைவு வரும், ஊர் வீடுகளும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு காட்டிய ஏழை எளியவர்களின் முகங்கள். என் தாத்தா பாட்டி வரலாற்றைச் சொல்லும் உள்ளூர் கல்வெட்டு மாதிரியான உயரமான தாத்தா ஆகிய எல்லோருடைய நினைவும் வரும். எல்லாவற்றிற்கும் எல்லோருக்கும் மேலாக, என்னை நிழல்போல் சுற்றிய தாமரைப்பாண்டி அத்தான் நினைவு வந்து, அதிலேயே மனம் நிலைக்கும். எல்லாம் நான் வீட்டில் இருக்கும்போதுதான். பள்ளிக்கூடம் போய்விட்டால். அங்குள்ள என் சீன, மலேய, தமிழ் சக மாணவிகளுடன் உரையாடுவதினால் ஊர் வாசனை மறந்துபோகும்."

"காலம் மற்றவர்களுக்கு எப்படியோ எங்களுக்கு என்னமோ நல்ல படியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. நான் சீனியர் கேம்பிரிட்ஜ் முடித்து விட்டேன். பொதுவாக வெளி நாட்டுப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு கோலாலும்பூர் பல்கலைக் கழகத்தில் இடம் கிடைப்பது கடினம். எங்க்ள் குடும்பமும், மலேயக் குடி மக்கள்ா காம ல் இந் தி ய பாஸ் போர் ட் க ைள யே வைத்திருந்தார்கள். என்றாலும், நான் எல்லா பாடங்களிலும் நல்ல மார் க் எடுத் திருந்ததால் , எ ன க்கு இந்த பாஸ் போர்ட் விவகாரத்தையும் மீறி இடம் கிடைத்தது."

"நான் பல்கலைக் கழகத்திற்குப் போகத் துவங்கியபோதுஎங்கள் வீட்டில் எல்லோர் தலையிலும் இடி விழுந்தது. என் அருமைத் தந்தை மாரடைப்பால் காலமானார். ஜவுளிக்கடையில் ஒரு ஒரு புடவையைச் சுருட்டிக் கொண்டிருக்கும்போதே சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு அவரைத் துக்கிக் கொண்டுபோன கார் அங்கு போகாமலே வீட்டுக்கு வந்தது. காலையில் கலகலப்பு மனிதராகப் போனவர், மத்தியானம் பிணமாக வந்தார். அப்பாவிற்கு ஐம்பத்தைந்து வயதிருக்கும். அந்தக் காலத்திலேயே கேம்பிரிட்ஜ் படித்தவர். அரசு அலுவலகத்தில் கைகட்டி உத்தியோகம் பார்க்க விரும்பாமல் தாத்தாவின் சம்மதத்துடன் ஜவுளிக்கடை வைத்தார். அப்பா அம்மா ஊருக்கு வரும்போதெல்லாம் ஜவுளிக்கடையில் கிட்டத்தட்ட கால்வாசியை காலி செய்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தவர்; என்னிடம் நேரிடையாகவே பல தடவை பேசியிருக்கிறார். "ஒம்மாவுக்காக நீ தாமரைப்பாண்டியனையோ, தடிப் பாண்டியனையோ கட்டக்கூடாது. கட்டிக்கறதாய் இருந்தால் ஒனக்காகக் கட்டிக்கணும். இந்த மலேயாவுல கிடைக்காத மாப்பிள்ளையா." என்பார்."

"உடனே ஏதோ ஒரு மூலையில் இருந்து, கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருந்து தாத்தா மகள்கிட்ட பேசுற பேச்சா இது. ஏய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/54&oldid=588283" இலிருந்து மீள்விக்கப்பட்டது