பக்கம்:நிழல் முகங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சு. சமுத்திரம்

பூவம்மா என்று மருமகளை - என் அம்மாவைக் கூப்பிடுவார். அப்பா அடங்கிப்போவார். அப்பாவிடம்தானே அப்பாவாகிப் போன பிறகுகூட, நேரிடையாகப் பேசமாட்டார்."

சீனிவாசன், அவள் நீண்ட கதையை கேட்க மனமில்லாமல் முணுமுணுத்தபடியே வெளியே போனான். உடனே பலராமன், "இந்தத் பீடை ஒழிஞ்சது மாதிரி, ஒன் பீடையும் ஒழிஞ்சுடும்மா." என்றான். என்றாலும், அந்தச் சூழலில் எவராலும் சிரிக்க முடிய வில்லை. முருக்கு, வேர்க்கடலை, வெள்ளரிக்காய் வகையறாக்களை கொண்டு வந்த சில்லரை வியாபாரிகளை, ரயில்பயல் போ. போ. என்பது மாதிரி விரட்டினான். அவர்கள், அவனை முறைத்தபோது, நவாப்ஜான், அடப் போங்கண்ணா போங்கப்பா. அப்புறமா வாங்க... இழவு வீட்டுக்கு பட்டு உடுத்திட்டு வந்தமாதிரி வந்துட்டானுக என்றான்.

தமிழ்ச்செல்வி, தொடர்ந்தாள்.

"அப்படிப்பட்ட அப்பா, வீட்டில் மல்லாந்து கிடத்தப்பட்டார். இந்திய நண்பர்கள் மட்டுமல்லாது, சீன மலேயா நண்பர்களும் வீட்டில் மொய்த்திருக்க அம்மா மயங்கிப்போய் அவர் மார்பிலேயே சாய்ந்தாள். தாத்தா, பெத்த மகனை மடியில் போட்டுக் கொண்டு எங்கேயோ வெறித்துப் பார்த்தார். அவ்வப்போது எங்களையும் கூட்டிட்டுப் போடா. என்னையும் கூட்டிட்டுப் போடா. என்று புலம்பினார். நான் ஒருத்திதான், கொஞ்ச நஞ்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அப்பாவின் கால்மாட்டில் உட்கார்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு தாத்தா என்னைப் பார்த்தபடியே இருந்தார். பிறகு மடியில் கிடந்த மகனின் தலையைக் கோதிய படியே, "டேய் என் பேத்திக்கு வழி சொல்லாமல் போயிட்டியேடா’ என்று புலம்பினார். உடனே, அப்பாவின் மார்பில் சாய்ந்து கிடந்த அம்மா என் பக்கமாய் விழுந்தடித்து என்னை மார்போடு சாய்த்த படியே அழுதபோது அதுவரை கண்களை இழுத்துப் பிடித்தும், வாயை தம் பிடித்தும் என்னையே அடக்கிக் கொண்ட நான் கதறினேன். தொண்டை கட்டும்வரை, மூச்சு முட்டும் வரை கத்தினேன். முட்டி மோதினேன்."

"நல்லவன் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். விருப்பு வெறுப்புக்களுக்கும் வேண்டுதல் வேண்டாமைக்கும் அப்பாற் பாட்டது. காலம் - மனித மனதை தனக்கு ஏற்றாற்போல் தான் மாறியது போல் ஒரு மனோ பிரமையான மாயையை உருவாக்கும் காலம். எங்களையும் மாற்றியமைத்தது. ஊரில் இருந்து வந்த கடிதங்கள், துன்பச் சுமையைப் பகிர்ந்து கொண்டன."

"காலம் தன் சுயரூபத்தை மீண்டும் காட்டியது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/55&oldid=588285" இலிருந்து மீள்விக்கப்பட்டது