பக்கம்:நிழல் முகங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 43

"தாத்தா, தள்ளாடும் வயதிலும் ஜவுளிக்கடைக்குப் போனார். அப்பா இறந்த ஆறு மாத இடைவெளிக்குள் அவரும் போய் விட்டார். தள்ளாமை வயதில், இயல்பாக இறந்துவிட்டவர்போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும், எனக்கும் அம்மாவுக்கும் வைரப் பட்ட மேனிக்காரனான அவர் இறந்ததன் காரணம் புரிந்தது. அவர் இறந்தபோது "மகளை விட்டுட்டுப் போயிட்டார்னு மகனைத் திட்டுனிங்களே மாமா. இப்போ நீங்களும் ஒங்க பேத்திக்கு வழி செய்யாமல் போயிட்டீங்களே' என்று அம்மா அரற்றினான். எனக்குத் தாத்தா இறந்ததுகூடப் பெரிதாகத் தெரியவில்லை. கடைசி ஒருவார காலமாய் வீட்டில் கட்டிலில் முடங்கிக் கிடந்தார். அப்போது அவரைப் பார்க்கவரும் அத்தனை ஆண்களையும் கட்டிப்பிடித்து அவர்களைத் தன் மகனாகப் பாவித்து "என் தங்க மகனே, எப்படிடா இருக்கே? பேத்திக்கு எப்போடா கல்யாணம் நடத்துறது.? சொல்லுடா. சொல்லுடா..." என்று அவர்களின் சட்டைகளைப் பிடித்து உலுக்கியதை இன்னும் என்னால் மறக்க முடியல..."

"நான் ஏற்கெனவே சொன்னது போல காலம் ஒரு மாதம் எட்டி நடந்து, எங்களையும் இழுத்துக் கொண்டதுபோல், விவகாரத்தை விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்க வைத்தது." *

'கண்போலப் பாவித்த கணவரும், அந்தக் கணவரைப் பிறப்பித்த தாய்மாமனும் இல்லாத வீடு அம்மாவுக்கு நரகமாகியது. அவன் ஜவுளிக்கடையை விற்கப் போனபோது நான் வேண்டாம் என்றேன். அம்மா எனக்கு உபதேசித்தாள்:”

"நான் இனிமேல் வாழறதே ஒனக்காகத் தானம்மா. ஊர்ல நாம் தலைமுறை தலைமுறையாய் சாப்பிடுவதற்கு நிலம் இருக்கு. நாம் தங்கி இருக்க டவுனுலேயே வீடு இருக்கு. கண்ணுக்கு அழகான என் அண்ணன் மகன் தாமரைப்பாண்டி இருக்கான். நீ திருநெல்வேலியிலேயோ துத்துக் குடியிலேயோ காலேஜ் படிக்கலாம். அவனைக் கட்டிய பிறகுகூட படிக்கலாம். நீ படிக்கணு முன்னு சொல்லும்போது அவன் தடுக்கவா போறான்? ஆனாலும் எல்லாம் உன் இஷ்டம். நீ என்ன சொல்றியோ அதுப்படி நடக்கேன். அதே சமயத்துல என்கிட்டே ஒரு உண்மையும் சொல்லியாகணும். என் தெய்வமும், அந்த தெய்வத்தோட தெய்வமும் நடமாடுன இடத்தில என்னால் அதிக நாளைக்கு நடமாட முடியாது. நான் சொல்றது புரியுதாம்மா."

"எனக்குப் புரிந்தது. அம்மாவுக்கும், எனக்கும் புரித்துவிட்டது என்பது புரியட்டும் என்பதுபோல், என் தாயைக் கட்டிப் பிடித்துக் கதறினேன். அவள் உயிரோடு இருப்பதற்காக நான் இந்த ஊரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/56&oldid=588288" இலிருந்து மீள்விக்கப்பட்டது