பக்கம்:நிழல் முகங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 க. சமுத்திரம்

சாகவும் துணிந்து விட்டேன். அதே சமயம், எனக்கும் இப்போது தாமரைப்பாண்டி மீது பிடிப்பு அதிகமாகிவிட்டது. அவன் தோளில் சாய்ந்து எனக்கு ஏற்பட்ட இழப்புகளை சொல்லிச் சொல்லி ஆறுதல் தேடுவதுபோல், கற்பனை செய்தேன்."

'கோலாலும்பூரில் இருந்த ஜவுளிக்கடையை விற்றோம். அப்பாவின் கடைசிக் காலத்தில், கிராமத்தில் மேலும் ஒரு ஏக்கர் நஞ்சை வாங்கிப் போட்டோம். தாமரைப்பாண்டி அப்பாதான் அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தார். ஜவுளிக்கடைக்குக் கடன் இருந்தது. கடன்காரர்களிடமே அதை ஒப்படைத்தோம். மூன்று லட்சம் ரூபாய் கைக்கு வந்தது. பணமாகக் கொண்டுபோக முடியாது என்பதால், அந்தப் பணத்தை நகைகளாக மாற்றிக் கொண்டோம். அப்பா இறந்த பிறகும் இப்படிக் கட்டாயத்தின் பேரில் நகை போடுவதற்கு அம்மா யோசித்தாள். ஒரு காலத்தில் சிரித்தபடியே தன்னை அலங்கரித்துக் கொண்டவள் இப்போது அழுதபடியே அலங்காரியானாள். இரண்டு டெக்குகளையும், விசிஆர், மிசின்களையும் வாங்கிக் கொண்டோம் என் மாமா சொக்காரர் களுக்கும் விதவிதமாகத் துணி எடுத்தோம். தாமரைப்பாண்டிக்கும், ரத்தினவேலுக்கும் நல்ல கடிகாரங்களாக வாங்கிக் கொண்டோம்."

பலராமன், பழையபடியும் இடைமறித்தான்.

"முதல் சொக்காரர்கள்னு சொல்றீங்களே. அப்படின்னா என்னம்மா..?”

"அவங்களைப் பேச விடுடா. எது கேட்கனுமுன்னாலும் டயிலே கேட்காதடா. அப்பால கேளு."

ளு

பலராமனும், நவாப்ஜானும், சில்லறைச் சண்டையை பரிமாறிய போது, லேசாய் இளைப்பாறியவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"சொல்றேன். பிராமணர்கள் கோத்திரமுன்னு சொல்றது மாதிரியான வார்த்தை சொக்காரன் என்கிறது. இதையே தமிழ்நாட்ல மலைவாழ் மக்கள் மநித் என்று சொல்வாங்க. இதுபோல திருநெல்வேலி மாவட்டத்துல சொக்ககாரங்கன்னால் சித்தப்பா பெரியப்பா..... சின்ன தாத்தா பெரிய தாத்தா வகையறாக்கள். அதுல முதல் சொக்காரங்க என்கிறது. சித்தப்பா பெரியப்பா பிள்ளிங்க."

"அவங்க எப்படியும் உறவு வச்சு, ஒப்பாரி வைக்கட்டும். ஒன் கதைய சொல்லுமா..."

"அம்மாவும் நானுமாய்ப் புறப்பட்டோம் என் சிநேகிதிகள் ரொம்பத் தடுத்தாங்க. சிலர் எனக்காக அழக்கூடச் செய்தாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/57&oldid=588291" இலிருந்து மீள்விக்கப்பட்டது