பக்கம்:நிழல் முகங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

அந்த ரயில், இப்போது ஏதோ ஒரு இரண்டு நிமிட தகர டப்பா ரயில் நிலையத்தில் நின்றது.

இந்த மாதிரி சமயத்தில், எழுந்து ரயில் கதவருகே போய் நிற்கும் பலராமனும், நவாப் ஜானும், அவள் வாயையே பார்த்தபடி நின்றார்கள். அவளோ, பேச்சை சட்டென்று நிறுத்தினாள். ரயில் புறப்படுவது வரைக்கும் பேச விரும்பாதவள்போல், அவர்களை சோகமாகப் பார்த்தாள். இதற்குள் அந்த ரயில் பயல், அவளைப் பேசும்படி பிராண்டி எடுத்தான். உடனே அவளும் அந்தப் பயவின் கையை, தன் கைக்குள் மூடியபடியே மீண்டும் வாய் திறந்தாள்.

'கோணச்சத்திரத்தில் நாங்க வாங்கிப் போட்ட வீடு மிகப்பெரியது. வீட்டு மூலையில் "வேல் மயில் இல்லம்" என்று பெயர் ஒரு பலகையில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பலகையை மாட்டியதே எங்க மாமாதான். அதற்கு இரு பொருள் இருப்பது, ஊருக்குக் போன பிறகுதான் புரிந்தது. வீட்டின் முன்பக்கம் என் தாத்தாவோட பெரிய போட்டோ மாட்டப்பட்டிருந்தது. போட்டோ என்னமோ சிரித்தது. ஒருவேளை தாத்தா மாமாவுக்குத் தாய்மாமா என்பதால் இருக்கலாம். ஆனால் தாத்தாவின் பெயரில் உள்ள பலகைக்குப் பதிலாக தாமரைப் பாண்டியன், பி.ஏ. என்ற பலகை வண்ணத்தில் மின்னியது.”

"எனக்கு ஏதோ இது அதிகப்படியாகவும், ஏதோ சூதிருப்பது போலவும் தோன்றியது. எனக்குக் கோபம் வரும் போதெல்லாம், என்னை அறியாமலே முன் வரிசைப் பற்களால் பின் உதட்டைக் கடித்து, என் காதுகளை என் கைகளாலேயே திருகிக் கொள்வேன். இதைப் பார்த்த என் அம்மா, என்னை ஒரு பக்கமாய் இழுத்துக் கொண்டு விஷயத்தைக் கேட்டாள். நான் உடனே அந்தப் பலகையின் விபரீத எழுத்துக்களைச் சொன்னேன். அம்மா கலகல வென்று கலக்கத்தோடு சிரிப்பதுபோல் சிரித்தாள். அல்லது நடித்தாள் என்று சொல்லலாம். எப்படியோ தன்னைத்தானே அடக்கிக்கொண்டு, மூளை இருக்குதா உனக்கு.? தாமரைப் பாண்டியன் யாரு. உன்னைக் கட்டிக்கப் போகிறவன். அவன் போர்ட் இருக்கது நமக்குப் பெருமைதானே...? இதில், அவன் நம்மிடம் உரிமை எடுத்திருக்கான் என்று தானே அர்த்தம்? என்று அனர்த்தம் கூறினாள்:”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/59&oldid=588298" இலிருந்து மீள்விக்கப்பட்டது