பக்கம்:நிழல் முகங்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 47

"இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்று நான் சொல்லவரவில்லை. இன்னிக்குக்கூட பேப்பர்ல ஒரு செய்தி வந்தது. புதுச்சேரியிலேர்ந்து குவைத் போய் அம்மாவுக்கு பணம் பனமா அனுப்பிய ஒரு வாலிபரைப் பற்றிய செய்தி. மகன் புதுவைக்குத் திரும்பினதும் தாய்க்கும் மகனுக்கும் ஒரு வீடு வாங்கியதில் தகராறு, விவகாரம் இப்போ உயர்நீதிமன்றத்துக்கு வந்திருக்கு. பெத்த மகனுக்குகே இப்படின்னா எங்களுக்கு ஏற்பட்டது பெரிசில்லே. பெரிசோ, சிறிதோ அனுபவகிக்கிறது நான் என்பதாலேயே இதைச் சொல்றேன்."

"சும்மா சொல்லக் கூடாது.... நாங்கள் ஊரில் போய் இறங்கியதும் ஊர் மக்களே திரண்டு வந்தார்கள். எங்கள் மாமா குடும்பத்துக்கு ஆகாதவர்கள்கூட திரண்டு வந்தார்கள். என் அம்மாவின் பழைய சிநேகிதிகள் அவளைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி இட்டார்கள். என் அப்பாவின் பங்காளிகளும் தேம்பித் தேம்பி அழுதார்கள். இதைப் பார்த்து ரயில் நிலையத்தில் அதிகமாய் அழாத என் மாமாகூட அழுதார். இந்த இரண்டு மாமாக்களும் அழுத்தார்கள். ஆனால் மாமாக்களின் மனைவிமாரும் பிள்ளை குட்டிகளும் ஒப்புக்கு அழுவது போலிருந்தது. மாமிகள் மூவரும் அழுது கொண்டே ஒருத்திக்கு ஒருத்தி பேசிக் கொண்டார்கள். ஆனால் வண்ணாத்தி வடிவும், குடிமகள் மாரியம்மாவும், சேரிப் பெண் ராமக்காவும் அழுத அழுகை ஏழேழு தலைமுறைக்கும் போதும். இவ்வளவுக்கும் இந்த எளிய மக்களுக்கோ ஊர்க்காரங் களுக்கோ நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை. எங்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பைக்கண்டு நான் திகைத்து விட்டேன். அந்தச் சமயத்தில் நான் பிறந்த மலேசியாவின் ஞாபகமே வரவில்லை என்று சொல்லலாம்."

"எப்படியோ ஒரு மாதம் ஓடியது."

"என் மாமா மகளுக்குக் கல்யாணம், அதாவது எனது பெரிய மாமா மகளுக்கு. என்னையும் தாமரைப் பாண்டியனையும், ஒன்றாகப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து குலவை போட்டாளே அவளுக்குத்தான். டில்லி மாப்பிள்ளை. என் மேல் கொள்ளைப் பிரியம் அவளுக்கு. கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. இருபது பவுன் நகை குறைகிறது என்று மாமா மூக்கால் அழுதார். அம்மாவிடம் ஜாடை மாடையாகச் சொன்னார். அம்மா கண்டுக்க்ாதபோது நான் கண்டு விட்டேன் மனிதக் கல்யாணத்திற்கு முன்னால் கேவலம் உலோகம் குறுக்கே நிற்கக்கூடாது. எங்களிடம் இருந்த முப்பது பவுனில் இருபதை அவள் கழுத்தில் போட்டேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/60&oldid=588300" இலிருந்து மீள்விக்கப்பட்டது