பக்கம்:நிழல் முகங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சு. சமுத்திரம்

அவளும் 'நீ மட்டும் இல்லையானால் அப்பா என்னை ஒரு விவசாயிக்குத் தள்ளியிருப்பார்" என்று சொன்னபடியே என்னைக் கட்டிப் பிடித்தாள்."

"இந்தச் சமயத்தில், என் இரண்டாவது மாமா மகளைப் பெண் பார்க்க வந்தார்கள். அழகில் சுமாரான அவளைப் பிரமாதமாக ஜோடித்துக் காட்ட விரும்பினார்கள். தான் கழுத்தில் போட்டிருந்த நெக்லஸையும் கையில் போட்டிருந்த காப்புக்களையும் ஒருநாள் கடனாகக் கேட்டார்கள். அம்மாவின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாது கழட்டிக் கொடுத்தேன். இந்த நேரத்தில், அம்மாவின் பங்காளிகள் சில்லறை சில்லறையாக சில ஆயிரங்களை வாங்கிக் கொண்டார்கள். பெரிய மாமா, மகளோட கல்யாணத்திற்குப் பணம் கேட்டார். "நீ செய்யாமல் யார் செய்வா..?" என்று தாமரைப் பாண்டியனையும் என்னையும் கண்களால் இணைத்துப் பார்த்த படியே கேட்டார். நான் மிச்சம் மீதியாய் இருந்ததைக் கொடுத்து விட்டேன்." -

'அப்படி கொடுத்து நாலு மாதமாகிவிட்டது. என்னிடம் நெக்லஸும், தங்க வளையல்களும் வாங்கிய இரண்டாவது மாமா வீட்டில் அதைப் பற்றியே பேச்சில்லை. ஒரு தடவை தயங்கியபடியே கேட்டபோது, "நிச்சய தாம்பூலம் ஆகட்டும். திருப்பித் தந்துடுறோம். இல்லாட்டால் அடிக்கடிக் கேட்க வேண்டிய திருக்கும். நெக்லஸைக் கடித்தா தின்னுடப் போகிறோம்" என்று மாமா அதட்டலாகச் சொன்னார். நாங்கள் பெரிய மாமா வீட்டில் தான் இருந்தோம். நடுல மாமா வீட்டுக்கும், சின்ன மாமா வீட்டுக்கும் அடிக்கடி போவோம். சின்ன மாமா அப்பாவி. அவருக்கு பதினெட்டு வயதில் ஒரு பையனும், பத்து வயதில் ஒரு பொண்ணும் இருந்தார்கள். அவர் வாய் பேசி நான் பார்த்ததில்லை. எங்கம்மா அவரைப் பார்த்து, "எப்படிடா இருக்கே?" என்று கேட்டவுடனேயே மாமா பல் தெரியச் சிரிப்பார். அக்காவைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டேயிருப்பார். அதோடு சரி. அதுதான் சரியென்பது மாதிரியான சிரிப்பு."

"நான்கு மாதத்திற்குள், என் பெரிய மாமாவின் மனைவி லேசாய் முணுமுணுக்கத் துவங்கினாள். அம்மாவின் முன்னால், எல்லா எச்சில் பாத்திரங்களையும் கொட்டுவாள். அது முடிந்ததும், அழுக்குத் துணிகளை அள்ளிப் போடுவாள். நாங்கள் மலேசியாவில் வாஷிங் மெஷின் வைத்திருந்தோம்; இந்த மாதிரியான வேலையைச் செய்தறியாதவள் என் அம்மா. ஆனால் மாமியோ, அம்மாவைத் தொடர்ந்து இந்த மாதிரியான காரியங்களை செய்யச் சொன்னாள். நான் வெகுண்டெழப் போனேன். உடனே அம்மா, "எனக்காகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/61&oldid=588303" இலிருந்து மீள்விக்கப்பட்டது