பக்கம்:நிழல் முகங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சு. சமுத்திரம்

சுய மரியாதை விஸ்வரூபம் எடுத்தது. துணிகளைக் கல்விலேயே போட்டுவிட்டு எழுந்தேன். மாமி அதட்டினாள்."

'என்னடி இது. வெயில் அடிக்கிற நேரமாய். துணியைத் துவைக்காமல்.’

‘என்னால முடியலை அத்தே. அப்போ எப்போதான் துவைக்கப் போறே.? "இது என்னோட வேலையில்லே." 'பார்த்தீங்களா. ஒங்க தங்கச்சி பொண்ணு பேசுறதை. இதுக்குத்தான் நாயைக் குளிப்பாட்டி.

'அத்தை பேச்சை முடிக்கும் முன்பாகவே, நான் பெரிய மாமாவை நேரிடையாகக் கேட்டேன்."

‘என்னையும் எங்கம்மாவையும் இனிமேலும் நடுவீட்ல வைக்க வேண்டிய அவசியம் இல்ல மாமா. இன்னைக்கே கோணச் சத்திரத்தில இருக்கிற எங்க வீட்டுக்குப் போயிடப் போறோம். எங்க நிலபுலத்தை நாங்களே ஆள் விட்டுப் பயிர் செய்துக்கப் போறோம். சாவியைக் கொடுங்க மாமா.

"பெரிய மாமா, என்னை அழுத்தமாகப் பார்த்தார். பிறகு, இதை எதிர்பார்த்தவர்போல், சிரித்துக் கொண்டார். அப்புறம் என்னைப் பொருட்படுத்தாதவர் மாதிரி மனைவியிடம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார். நான் பொறுமையைக் காட்டிக் கொடுத்துவிட்டேன்."

மாமா. ஒங்களைத்தான்! கோணச்சத்திரத்துல இருக்கிற எங்க வீட்டோட சாவியைக் கொடுங்கோ.

அத்தை குறுக்கிட்டாள். இவளுக்கு யார் சாவி கொடுத்ததுன்னு கேளுங்களேன். ஏன் பேசாமல் குத்துக்கல் மாதிரி நிற்கீங்க..?

"மாமா லேசாய் வாயசைத்தார், என் அம்மாவை நோக்கி." பூவம்மா. ஒன் மகள் பேசுற பேச்சைப் பார்த்தியா..? அவள் பேசுறதுல என்னண்ணாச்சி தப்பு.? "மாமா இப்போது ஆங்கார, ஒங்காரமாய்க் கத்தினார். பேச்சில் நியாயம் தாழ்ந்தவர்கள் குரலை உயர்த்திக் கத்துவதுபோல் மாமாவும் கத்தினார். அப்போது எங்களுக்குள்ளேகூட, நாங்களே ஏதோ தப்பு செய்தது மாதிரி ஒரு மாதிரி ஒரு நடுக்கம்."

'இந்தா பாரு பூவம்மா. எப்போ நீ சட்டம் பேசத் துவங்கினியோ அப்பவே நானும் சட்டம் பேசியாகணும். ஒன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/63&oldid=588310" இலிருந்து மீள்விக்கப்பட்டது