பக்கம்:நிழல் முகங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 51

புருஷன் வெளிநாட்ல இருந்துக்கிட்டே உள் நாட்ல சொத்து வாங்கிப்போட்டால் சட்டச்சிக்கல் வருமுன்னுதான் ஒங்களோட நன்மைக்காக கோணச்சத்திர வீட்டையும், முடிதீர்த்தான் குற்றாலப் பேரிடை சத்திரப்பட்டை நிலத்தையும் என் பெயருக்கே வாங்கிப் போட்டேன்:

'அடக்கடவுளே. சரி. இப்போதாவது என் பெயருக்கு எழுதிக் கொடு அண்ணாச்சி:

அதுதான் நடக்காது. ஒன் தம்பி கிட்டே பத்து பவுன் நகையை இழந்துட்டே. பங்காளிங்ககிட்டே ஆயிரக்கணக்குல ரூபாயை இழந்துட்டே. இந்தச் சொத்தையும் ஒன் பேருக்கு எழுதி வச்சால் அவ்வளவுதான். ஒரு வருஷத்துல எல்லாச் சொத்தையும் இழந்துடுவே. அதனால சொத்தெல்லாம் என் பேருக்கே இருக்கும்

'அம்மா தட்டுத் தடுமாறிப் பதிலளித்தாள். அப்போது தாமரைப்பாண்டி அங்கு வந்து நின்றான். அவனைப் பார்த்ததும், அம்மா கேவிக் கேவி அழுதாள். அவனது இரண்டு கரங்களையைம் பற்றிக் கொண்டு அழுதழுது பேசினாள்."

'பாரு தாமரை. ஒங்கப்பா வாழவும் விட மாட்டங்கான். சாகவும் விடமாட்டங்கான். ஒண்னு இவளை ஒனக்குக் கட்டி வைக்கணும். அப்போ கணக்குப் பார்க்க வேண்டிய அவசியமில்ல. இல்லன்னால் கணக்குப் பார்த்து. சொத்தையாவது தரணும். நீயாவது சொல்லுப்பா. நான் ஒன்னோட அப்பாகூடப் பிறந்த அத்தை. இவள் ஒனக்கு அத்தை மகள் மட்டுமில்ல. ஒன்னையே நம்பியிருக்கிறவள். சொல்லு ராசா.

ராசா தாமரைப்பாண்டி கம்பீரமாய்ப் பதிலளித்தான்.

சொத்து பத்து விவகாரம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒங்க மகளைக் கல்யாணம் மட்டும் செய்துக்க முடியாது.

காரணத்தையாவது.

'அதைச் சொன்னால் நீங்களே ஒங்க மகளைக் காறித் துப்புவீங்க.. ஆனாலும் நீங்க கேட்கிறதால சொல்றேன். நான் அவளுக்குத் தாலி போட்டாலும், அவளைக் கொஞ்சப் போகிறவன் சித்தப்பா மகன் ரத்தினவேல்தான். முன்னால ஊருக்கு வந்திருக்கும்போது என் கண்ணாலயே நான் பார்த்தேன்.

அம்மா, என்னை பயந்தும் பயமுறுத்துவது போலவும் பார்த்தாள். எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ.. எப்படித்தான் அந்த வார்த்தைகள் வந்ததோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/64&oldid=588313" இலிருந்து மீள்விக்கப்பட்டது