பக்கம்:நிழல் முகங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சு. சமுத்திரம்

டேய் தடிப்பயலே. ஒன் வாய் அழுகாமல் போகாதுடா.

"நான் குலுங்கிக் குலுங்கி அழுதபோது, தலை சுள்ளென்று வலித்தது. தாமரைப்பாண்டி, என் தலை முடியைப் பற்றிக் கொண்டு என்னை அங்குமிங்குமாகச் சுற்றுகிறான். என் விலாவைக் காலால் இடறினான். மாமாவும், அத்தையும் பேசாமல் நிற்கிறார்கள். அம்மா, அவனிடம் கெஞ்சுகிறாள். 'விட்டுடுப்பா. விட்டுடுப்பா. என்று பிச்சை கேட்கிறாள். தாமரைத் தடியன், என் உடம்பை ரத்தச் சேறாய் ஆக்குகிறான். எனக்குப் பிராணவலி, ஆடை கலந்த அவமானம். அப்போது

இன்னொருத்தன் வெட்டரிவாளோடு அங்கே வருகிறான். அந்த ஆயுதத்தால் எதையோ செய்யப் போகிறவன்போல், ஆவேசத்தைக் குறைத்து, அழுத்தத்தை அதிகரித்து நடந்து வருகிறான்.

அந்த ரயில், இப்போது நடுக்காட்டுக்குள் ஒருவித நடுக்கத்துடன் முனங்கியபடியே நின்றது.

அப்படி அது நிற்பதற்கான காரணம் புரியாமல், பலர் எழுந்தார்கள். எழுந்தவர்களில் சிலர் கீழே இறங்கினார்கள். ஒருவேளை இந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய நவாப்ஜானும், பலராமனும், தங்களைப் பொறுத்த அளவில் சுற்றுப் புறச்சூழல் அற்றுப் போனவர்கள்போல், அவளையே பார்ர்த்துக் கொண்டிருந்தார்கள். அதே டில்லிப் பெண்களும், தங்கள் தலைமுடியையும் யாரோ பற்றுவதுபோல் முகம் கொண்டார்கள். அந்த ரயில் பயலும், கண்களைத் துடைத்துக் கொண்டு அவளை ஒட்டிக் கொள்வதுபோல் நெருங்கிக் கொண்டான். ரயிலோடு ஓடிய காடுகளும், குன்றுகளும் அப்படியே உறைந்து போனது போன்ற அலாதியான சூழல். மேடு பள்ளங்களை நிரப்பிய காட்டு மரங்கள்; கீழே விழப்போவது போன்ற மலைச்சரியல். அந்த வனாந்தரக் காட்டின் சூன்யச் சூட்டைத் தாங்க முடியாதவர்கள் போல், ரயிலி ல் இருந்து இறங்கியவர்கள் ஏறிக் கொண்டார்கள்.

ரயில் ஊளையிட்டது. ஊளையிட்டபடியே, தமிழ்ச்செல்வியின் கால்கள் தாமரைப் பாண்டியனிடம் சிக்கி எப்படி நொண்டியடித்து இருக்குமோ, அப்படி, சக்கரக் கால்களை தண்டவாளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/65&oldid=588315" இலிருந்து மீள்விக்கப்பட்டது