பக்கம்:நிழல் முகங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் - 53

அழுந்தப்பதித்து அழுகைக் குரலெழுப்ப அடிபோட்டது. தமிழ்ச்செல்வி, தனது சோக வரலாற்றைத் தொடர்ந்தாள். அவளையறியாமலே கண்கள் நீரைக் கொட்டின. தலை அப்போதும் பிடிபட்டதுபோல் அங்குமிங்கும் ஆடியது. ஒலப் புலம்பலோடு நடந்ததை ஒப்புவித்தாள்.

"வெட்டரிவாளோடு வந்தவன் என் சின்ன மாமா மகன் வைத்தியலிங்கம். பதினெட்டு வயதுப் பையன். சாட்டைக் கம்பின் இறுக்கம் மாதிரியான தோரணை, அரிவாளால் மரத்தையும், ஒலைகளையும், கம்புகளையும் சீவிச்சீவி அரிவாள்போல் கூர்பட்ட கைகள். கோடரியால், பனையையும் தென்னையையும் வெட்டி வெட்டி அந்தக் கோடாரி போல் வைரம் பாய்ந்த உடம்பு, மண் வெட்டியால், மண்ணையும், சரலையும் வெட்டி வெட்டி அந்த மண் வெட்டிபோல் காணப்பட்ட கால்பாதங்கள். பால் மாறாத முகம் காட்டிய அவன், இப்போது கொதிக்கும் பால்போல் பொங்கினான். வெட்டரிவாளை தாமரைப் பாண்டியை நோக்கி ஓங்கியபடியே கத்தினான்."

டேய் தாமரை! அண்ணிய விடுடா, அஞ்சு வரைக்கும் எண்ணப் போறேன். அதுக்குள்ளே நீ எங்கண்ணியை விடல, ஒன் தலை. உடம்புல இருந்து விடுபட்டுடும். ஒண்னு. ரெண்டு. முனு.

தாமரைப்பாண்டி, அதிர்ந்து விட்டான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் முட்டி வரைக்கும் உள்ள வேட்டியை முழங்கால் வரைக்கும் இழுத்துப் போட்டபடி, ஒரு ஒரமாய் அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் பார்த்தபடியே நடக்கும் சித்தப்பா மகன் வைத்தியலிங்கத்தின் புதிய பரிணாமம் கண்டு பதறிப்போனான். அந்த அதிர்ச்சியில், அவன் "நாலு" என்று சொல்வதற்கு முன்பே, என்னை விட்டு விடுகிறவன்போல் பிடித்துத் தள்ளினான். நான், அந்த உந்தலில் என் சின்ன மாமா மகன்மேல் விழப்போனேன். அவன் என்னைத் தாங்கிக் பிடித்தபோது, அவன் தோளில் முகம் போட்டு, குலுங்கிக் குலுங்கி அழுதேன். அதனால் மேலும் உணர்ச்சி வசப்பட்டவன்போல், வைத்திய லிங்கம் வெட்டரிவாளை விடாமலே வீறாப்பாய்க் கேட்டான்.

டேய். தாமர. அண்ணியோட செயினை கழுத்துல போட்டுக்கிட்டு, பண்ணி மாதிரி சுத்துற அயோக்கியா. அவங்களைப் போய் அடிக்கிறதுக்கு எப்டிடா ஒனக்கு மனசு வந்தது.? உண்மையிலேயே நீ ஆம்புளைன்னால் எங்க அண்ணியை ஒரு தடவ தொடு பார்க்கலாம். இதை ஒனக்கு மட்டும் சொல்லல. ஒப்பனுக்கும் சேர்த்துத்தான் சொல்லுறேன்.

கி.இ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/66&oldid=588318" இலிருந்து மீள்விக்கப்பட்டது