பக்கம்:நிழல் முகங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சு. சமுத்திரம்

பெரிய மாமா, வைத்தியலிங்கத்தை இடைமறித்துக் கேட்டார்.

என்னல. பேய்ப் பயல் மாதிரி ஆடுற. பெரியவன் சின்னவன் என்கிற தராதரம் தெரியாமல்.’

'இனிமேல் நீங்க எனக்கு வயசுல மட்டும்தான் பெரியவரு. மனசுலயோ மரியாதையிலயோ இல்ல. கூடப் பிறந்த தங்கச்சிக்கு துரோகம் செய்த நீரு உருப்படப் போறதுல்ல. ஒன் மவனும் கல்யாணம் செய்தாலும் அவன் பெண்டாட்டி இன்னொருத்தனைக் கூட்டிட்டு ஒடித்தான் போவாள். மனுஷங்களாய்யா. நீங்க? உங்க உடம்புல ஒடுற ஒவ்வொரு துளி ரத்தமும் எங்கத்தை புருஷனோட வேர்வை. அவங்களை நடுரோட்ல கொண்டு வந்து நிறுத்திட்டு. நீ அரங்கு வீட்ல வாழ்ந்துடலாமுன்னு நினைக்காதிங்கப்பா. இந்த ஊர்வ ஒங்க வீட்டுக்கு மட்டும் பூகம்பம் வரும். பாருடா. எப்படி இருந்த அண்ணியை இப்படிப் பண்ணிட்டே... ஒவ்வொரு முடியையும் கோடு கோடாய் நினைச்சு வைக்கிற எங்க அண்ணியோட தலையைப் பாருங்கய்யா. நீங்களே நியாயம் சொல்லுங்கய்யா...'

"இதற்குள் கூட்டம் கூடிவிட்டது மாதிரி எனக்குத் தோன்றியது. வைத்தியலிங்கம் அந்தக் கூட்டத்தைப் பார்த்துத்தான் கேட்டுக் கொண்டிருந்தான். நேற்று பிறந்த பயல், இப்படி அவமானமாய்ப் பேசிவிட்ட அவமானத்தில் தாமரைப்பயல் நின்றபோது, உள்ளூர் கிருஷ்ண பரமாத்மாவான ஒருத்தர் சரி. தாமரை. அப்படி அடித்து இருக்கப்படாது. அடித்ததுக்கு வருத்தப்பட்டு நிற்கான் பாருங்க என்று சம்பந்தமில்லாத ஒன்றை சம்பந்தப்படுத்திப் பேசினார். அவர் பேசிய தெம்பில், என் பெரிய மாமா மனைவி, பாவிப்பய பொம்புளை. ஆமை புகுந்தது மாதிரி வந்துட்டாளுகளே. வைத்தியலிங்கம் பயலை ஏவி விட்டுட்டாகளே. இவ்வளவு நடந்த பிறகும் இவளுக என் வீட்ல இருக்கப்படாது. இருக்கப்படாது' என்று கிளி மாதிரி. சீ. இவங்களா கிளி. ஆந்தை மாதிரி அலறினாள்."

அப்போது, கூட்டத்திற்குள் இருந்து திடீரென்று ஒருத்தர் முன்னால் வந்தார். என் சின்ன மாமா. வைத்தியலிங்கத்தின் தந்தை. அந்த வாயில்லாப் பூச்சி, இப்போது ராட்சதப் பல்லிபோல் பேசியது. பெரியண்ணன் மனைவியின் வாய் கிழிந்த கேள்விக்கு, காது செவிடாகப் பதிலளித்தார்.

"இனிமேலும். ஒன் வீட்ல என் அக்கா இருக்கதுக்கு அவள் ஒன்னை மாதிரி வெட்கங்கெட்டுப் போனவள் இல்ல. ஒன்னை மாதிரி தட்டுக்கெட்டவ இல்ல. ஏக்கா. ஒன்னத்தாக்கா. என் வீட்டுக்கு வாங்கோ, கூழோ விஷமோ ஒண்ணா குடிப்போம். இந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/67&oldid=588322" இலிருந்து மீள்விக்கப்பட்டது