பக்கம்:நிழல் முகங்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 55

பயல்கள். ஒன் சொத்தையும் பணத்தையும் தந்தால் தரட்டும். தராட்டால் நாசமாப் போகட்டும். வாக்கா. இன்னுமாக்கா இந்த வீட்ல நிக்கே...? இது நம்ம அண்ணன் வீடு இல்லக்கா... நம்பிக்கையையும் பாசத்தையும் பிணமாக்கி வச்சுறுக்கிற சமாதி”

எங்கம்மா அப்படியே பாய்ந்து போய் சின்னமாமாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அந்தப் பாச வேகத்தில், அம்மாவின் கை நரம்புகள் தெறித்துக் தெரிந்தன. ஊர்க்கூட்டமோ என் சின்ன மாமா, இதுவரை ஊமையாக இருந்தது போலவும், இப்போதுதான் பேசிப் பார்க்கிறரா என்பது போலவும் அதிசயித்துப் பார்த்து, என் அம்மாவோ, தம்பியை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தம்பி. தம்பி. இந்த பாவி உனக்கு எதுவுமே செய்யலியே தம்பி, உனக்கு எதுவும் செய்யாத இந்த பாவியை சேர்த்துக்காதே தம்பி. என்று ஒப்பாரியிட்டாள். உடனே என் மாமா, நீ செய்திருக்கத்தான் செய்யுற ஒன் அழுகையை இதோட நிறுத்திக்கக்கா. கிருஷ்ணன் குசேலரோட அவலைத் தின்று அவரை உயர்த்தினான். ஆனால், நீ அழ அழ இவன் அடியோடு போயிடுவான். அவனுக்கு நீ தங்கச்சி இல்ல. ஆனால் ஒனக்கு அவன் அண்ணன்தானே. விட்டுத் தள்ளு. சாகும்போது அவன் எவ்வளவு நிலத்தைத் துரக்கிட்டு போகப் போறான்னு பார்த்துடலாம்."

தா ம ைர ப் பாண் டி ய னி ட ம் ப ட் ட அ டி யாலு ம் , அவமானத்தாலும் குன்றிப்போன எனக்கு லேசான ஏமாற்றம். வீறாப்பாய்ப் பேசிய சின்ன மாமா, சுருதி இறங்கியதைப் புரிந்து கொண்டேன். அவர் மூலம் எங்கள் சொத்துக்களை மீட்க நினைத்த எனக்கு, அவரது வேதாந்தம் வேதனையைக் கொடுத்தது. ஆனால் இதுதான் மாமாவின் சுபாவம். "சிறியன சிந்தியாதார்" என்று சான்றோர்களைச் சொல்வார்களே, அந்த ரகம் சின்ன மாமா. வெறும் சின்ன மாமா இல்ல. அவர் மனிதாபிமானம்போல் தோன்றினார்.

இதற்குள், ஊரார் ஆளுக்கு ஒன்றாகப் பேசத் துவங்கினார்கள். சிலர், அந்த நிலையிலும், எனக்கும் தாமரைப்பாண்டிக்கும் கல்யாணம் நடத்த வேண்டும் என்றார்கள். அதாவது கட்டிய பிறகு என்னை அடிக்க வேண்டியவன், கட்டுவதற்கு முன்பு அடித்ததில் தப்பில்லை என்பதுபோல், இன்னும் சிலர், "பாவம். அந்தப் பொண்ணு. அநாதரவாய் நிற்குது. தாமரைப்பாண்டிக்கு முடிச்சுப் போடுவதில் அருத்தமில்ல. பேசாமல் ரத்தினவேலுவுக்குக் கட்டி வச்சுடலாம்." என்றார்கள். அப்போது ரத்தினவேலும் பேசினான். இப்போதுதான் அவனைப் பார்க்கிறேன். ஒருவேளை, நான் அடிபட்ட போது வந்தானோ.. அதற்குப் பிறகு வந்தானோ. பேசாமல் நடத்திடலாம் என்றவருக்குப் பேசிப் பதிலளித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/68&oldid=588325" இலிருந்து மீள்விக்கப்பட்டது