பக்கம்:நிழல் முகங்கள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சு. சமுத்திரம்

"நல்லா இருக்குதே. நான் மட்டும் இளிச்சவயானா..?”

இதற்குள் அவன் அம்மா அந்தப் பக்கம் வந்தாள். "ஒனக்கு இங்க என்னடா வேலை?" என்று சொல்லி, அவனை மாட்டை இழுப்பது போல் இழுத்துக்கொண்டு போனாள். நான் உச்சி முதல் உள்ளங்கால் வரை அவமானப்பட்டேன். அந்தக் காலத்து நீக்ரோ அடிமைபோல் மனதுக்குள் துள்ளித் துடித்தேன். அதிலும் மனதுக்குள் ஒரு ஆறுதல். நல்லவேளை. இந்த சுடு சொல்லிலும், ரத்தினவேல் அடிக்காமல் விட்டானே. நன்றி சொல்லனும் அவனுக்கு. இவ்வளவு சொன்ன பிறகும் அவன் அடித்தால் வலிக்குமா என்ன. இதற்கு மேல் எந்த அவமானம் வந்தால் என்ன. வராவிட்டால் என்ன. அய்யோ என்னை வேசியைவிடக் கேவலமாக ரெண்டு பேரும் நினைச்சுட்டாங்களே. என் சீனச் சிநேகிதி லிங்யூ சொன்னாள். ஒனக்கு பிறந்த ஊர்தான் தாயகமின்னு. என் மலேயா சிநேகிதி அரட்டினாள். அங்கே போகாதே... அவஸ்தைப்படாதே... என் தமிழ் சோதரிகள் சொன்னார்கள் ஏண்டி. நாங்கல்லாம் தமிழ்ப் பெண்களாய் தோணலியா? நாம் இருக்கிற இடம் தமிழ்க்குடியிருப்பு இல்லையா?”

நான் பேசுவதறியாமல், பிழை செய்தவள்போல் நின்றபோது, என் அம்மா ஊர்க்காரர்களிடம் மன்றாடினாள். அவள் கையெடுத்துக் கும்பிட்டுப் பிச்சை கேட்பது போல் கேட்டாாள்.

"நான் கொடுத்த எல்லாத்தையும் கேட்கலய்யா. பாதியையாவது கொடுக்கச் சொல்லுங்கய்யா. கோணச்சத்திரத்து வீட்ல எங்களை இருக்க வையுங்கய்யா. இல்லான்ன எங்க ரெண்டு பேரையும் மலேசியாவுக்கு அனுப்பி வையுங்க. அதையாவது செய்யுங்க. அங்கே இருக்கிற ரத்தம் சம்பந்தமில்லாத அதேசமயம் அதைவிட மேலாய் எங்களுக்கு உதவினவங்க எங்களைக் காப்பாத்து வாங்கய்யா."

அந்த ஊரில் விவகாரம் பேசுகிறவர்கள், எந்த ஊரிலும் விவகாரம் பேசுகிறவர்கள்போல், ஊர்ச் சொத்தை எடுத்து தங்கள் வீட்டு உலையிலே போட்டவர்கள். மோசடி செய்வதில் என் பெரிய மாமாவுக்கு இணையானவர்கள். அம்மாமீது சிறிப் பாய்ந்தார்கள்.

"ஒனக்கு அந்நிய நாட்டுக்காரங்கதான் பெரிசுன்னா அங்கேயே இருக்க வேண்டியதுதானே. நாங்க மட்டமுன்னு சொல்லாமல் சொல்லிட்டுப்பிறகு ஏன் நியாயம் கேட்கிறே...? வாங்கடா போகலாம். அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும், நமக்கு ೯೯Gāraಠ7."

கூட்டத்தில் நின்ற பெரிய மனிதர்கள், தாங்கள் போனபிறகு எந்த சின்ன மனிதர்களும் நிற்கப்படாது என்பதுபோல், அவர்களை விரட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/69&oldid=588328" இலிருந்து மீள்விக்கப்பட்டது