பக்கம்:நிழல் முகங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 57

நான் அவமானச் சிந்தனையை, பொருளாதாரச் சிந்தனையால் விரட்டிவிட்டு, கலையப் போன கூட்டத்தின் முன்னால், கலந்து போய் நின்றேன். கையெடுத்துக் கும்பிட்டபடிக் கேட்டேன்.

"அம்மா தப்பா பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க. இனிமேல் எங்கம்மாவுக்கு நீங்கதான் அண்ணன் தம்பிங்க.."

"அப்போ ஒன்னை வீட்டுக்குக் கூப்பிடுகிறானே, சின்னமாமன், அவன் ஒங்கம்மாவுக்குத் தம்பியாய்த் தெரியலையோ..? காலம் கலிகாலம்பா. அவன் ஒரு பைத்தியக்காரன்."

நான் என்னை மடக்கியவரைப் பார்த்தேன். என் பெரிய மாமாவின் மனைவியோட அண்ணன். ஊரில் அவருக்குப் பெயர். சா னி ப் பெ ட் டி . . . கோ ள் சொல் லி , எ ப் படி யாவது எங்களைத் திக்ககற்றவர்களாகிவிட வேண்டும் என்பதற்காகவே என் பேச்சுக்கு அனர்த்தச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவருக்கும் சொல்வதுபோல் எல்லோருக்கும் சொன்னேன்.

"தயவு செய்து ஏற்கெனவே பொறிகலங்கி நிற்கிற எங்களை நோகடிக்காதீங்க. பெரியப்பா. ஒங்க தங்கச்சி புருஷனுக்கு நாங்க கொடுத்த பணத்தையும் சொத்தையும் மீட்டுக் கொடுங்க பெரியப்பா.”

"பேசுறதப் பாரு.. தங்கச்சி புருஷனாம். மாமான்னு வாய்ல வராதோ..."

"இன்னும் அனார்த்தமாய்ப் பேசினால் என்ன பெரியப்பா அர்த்தம். நீங்களும் எங்கப்பாவுக்குப் பெரிய தாத்தா பேரன். ஒங்க தாத்தாவும் எங்கப்பா தாத்தாவும் அண்ணன் தம்பிங்க... எங்களுக்காக பேச வேண்டிய நீங்க, இப்படிப் பேசினால் எப்படிப் பெரியப்பா."

"ஆமா.. என் வீட்லதானே கொட்டுனே.”

"கொட்டுன இடத்துலக் கொட்டுப்பட்டு நிற்கிற எங்களை குட்டாதீங்க பெரியப்பா. எங்க சொத்தை மீட்டுக் கொடுங்க. எங்க நடுல மாமாகிட்டப் பதினைந்து பவுன் நகை கொடுத்தோம். அதையும் வாங்கிக் கொடுங்க."

என் இரண்டாவது மாமாவின் மனைவி, மகன் ரத்தினவேலை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் என்று தான் நினைத்தேன். ஆனால், அவன் எங்கிருந்தோ திடீரென்று தோன்றினான். என் கண்ணின் பக்கமாய் விரலை ஆட்டியபடியே கேட்டான்.

"அந்த மனுஷன்தான் குடிகாரன். லோலன்னு தெரியுமே. யாரைக் கேட்டு அவன்கிட்டே கொடுத்தே...? கொடுத்தவரை மட்டும் கேளு. எங்ககிட்ட கேட்காதே. கேட்கிறதுக்குச் சட்டமில்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/70&oldid=588330" இலிருந்து மீள்விக்கப்பட்டது